SKIP TO MAIN CONTENT

இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலிய குடும்பத்துக்கு கொரோனா கொடுத்த அதிர்ச்சி!

Australian Border Forcer officials at Perth airport.
Australian Border Forcer officials at Perth airport. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

இந்தியாவுக்கு ஆறு வார சுற்றுலா சென்ற மேற்கு ஆஸ்திரேலிய குடும்பமொன்று கொரோனா தொற்றுப்பரவலினால் ஏற்பட்ட ஊரடங்கு, பயணத்தடை ஆகியவற்றினால் அலைக்கழிந்து சுமார் 40 ஆயிரம் டொலர்கள் செலவு செய்து ஒருவாறு கடந்த வாரம் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

கடந்த பெப்ரவரியில் தங்களது இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இந்தக்குடும்பத்தினர் கொரோனா பரவலினால் புதுடில்லியில் வெளியில் புறப்பட்ட முடியாமல் அகப்பட்டுப்போனார்கள்.

அதன்பின்னர் நாடு திரும்புவதற்கு பல்வேறு விமான சேவைகளில் பதிவுகளை மேற்கொண்டபோதும், அவை வெற்றியளிக்காமல் பெருந்தொகையான பணம்தான் விரயமானது. மறுபுறத்தில், நால்வரும் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் பெருந்தொகை பணம் செலவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அரசு தனது மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் விமானங்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்தபோது, தாங்கள் பூட்டான் எல்லையில் நின்றதாகவும் சரியான நேரத்துக்கு வந்துகொள்ளமுடியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடைசியில், சுமார் 15 ஆயிரம் டொலர்களுக்கு நால்வருக்கும் விமான டிக்கெட் எடுத்து மேற்கு ஆஸ்திரேலியா திரும்பியவர்கள், பெர்த்தில் மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்திய 14 நாள் ஹோட்டல் செலவாக நான்காயிரம் டொலர்கள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now