SKIP TO MAIN CONTENT

பெற்ற தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய மேற்கு ஆஸ்திரேலிய நபருக்கு 17 வருட சிறை!

handcuffed
Criminal handcuffed to bars in jail Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

தனது சொந்தத்தாயை மூன்று தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  நபருக்கு மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 17 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது குறித்த நபர்  போதையில் தனது தாயின் இடுப்பில் இரும்பு குழாயினால் தாக்கி, அவரை மூன்று தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் தாயார் தொலைபேசியில் தனது மகளுக்கு விடயத்தைக்கூறினார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிறைபோதையில் செய்த குற்றம் தொடர்பில் தனது கட்சிக்காரருக்கு எந்த நினைவும் இல்லை என்று குறித்த நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறினார்.

எனினும் இந்தக்கொடூரமான குற்றத்தைப் புரிந்தமைக்கு போதை ஒரு காரணமாக அமையக்கூடாது என்றும் இந்த தீர்ப்பு போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் ஒரு செய்தியாக அமையவேண்டும் என்றும் கூறியுள்ள நீதிபதி, 17 வருட சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now