SKIP TO MAIN CONTENT

மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்!

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

1 min read

Published

Updated


Skip to article content

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

General அல்லது Graduate பிரிவுகளின் கீழ்  state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும். 

இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

எப்போது முதல் இதற்கு விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட மேலதிக விவரங்களை migration.wa.gov.au என்ற இணைப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now