வரலாறு காணாத வெள்ள நீர் NSW இல் உள்ள பகுதிகளை மூழ்கடித்து வருகிறது, விக்டோரியாவில் உள்ள பகுதிகளுக்கு 'வெளியேறுவதற்கு மிகவும் தாமதம்' என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Murray ஆற்றுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பூர்வீக குடிமக்களின் உடல் எச்சங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் அபாயம் எழுந்துள்ளது.
Eugowraவில், 85 வயதான Les Vugec ஐ தேடும் பணி தொடர்கிறது.
Eugowraவில் வசிக்கும் 60 வயதான Dianne Smith காணாமல் போயிருந்தநிலையில், அங்கு மீட்கப்பட்ட உடலொன்று அவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சடலத்தின் அடையாளத்தை பொலிஸார் இன்னும் முறையாக உறுதிப்படுத்தவில்லை.
NSW மாநில அவசர சேவை (SES) சிறிய நகரத்தில் உள்ள 284 வீடுகளை வெள்ள சேதத்திற்காக மதிப்பீடு செய்தது. இவற்றில் சுமார் 80 சதவீதம் வீடுகள் "சேதமடைந்தவை" என்று கருதப்படுகின்றனஇ மேலும் பல இனி வாழ்வதற்கு பாதுகாப்பாக இல்லை என்று கருதப்படுகின்றன.
NSW SES பல வாரங்களுக்கு Eugowra வில் சேவைகளைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜூன் 1952 வெள்ளத்தின் போது பதிவு செய்யப்பட்டதைப் போலவே Lachlan நதி இன்று உச்சத்தை எட்டக்கூடும் என்பதால், Forbesல் உள்ள மக்கள் தொடர்ந்தும் வெளியேறுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
Cottons Weir, Condobolinலின் மற்றும் Euabalong ஆகிய இடங்களில் வெள்ள நீர் மட்டம் ஏற்கனவே 1952 வெள்ளத்தின் போது பதிவானதை விட அதிகமாக உள்ளது.
Warren, Mulgawarrina, மற்றும் Gongolgon ஆகிய இடங்களில் பெரும் வெள்ளம் தொடர்வதால், வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இருந்து Mudallஇல் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றிரவு விக்டோரியாவின் Iraakற்கு 'too late to leave' என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெளியேறாதவர்கள், மிக உயர்ந்த இடத்தில் தங்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் மர்ரே ஆற்றின் குறுக்கே வெள்ளம் அதிகரிப்பதால், பூர்வீக குடியினரின் புதைகுழிகள் பாதிக்கப்படலாம் என Mannum Aboriginal Community Association தலைவர் Ivy Campbell, எச்சரித்துள்ளார்.
Bureau of Meteorology, NSW SES, VIC SES ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.
பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.