மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம் தனது எல்லையை விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தவர்களுக்கென திறக்கவுள்ளதாக அம்மாநில Premier Mark McGowan அறிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி முதல் இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளின்றி மேற்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியும்.
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின்னர் இவ்வாறு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளற்று மேற்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவுள்ளனர்.
இருப்பினும் விமானநிலையத்தில் வைத்து உடல் வெப்பநிலை சோதனை உள்ளிட்ட health screening மேற்கொள்ளப்படும் எனவும், கடந்த காலத்தில் எங்கெங்கு சென்றார்கள் என்ற விபரங்களைத் தெரிவிக்கும் வகையில் G2G pass படிவத்தை நிரப்ப வேண்டுமெனவும், தேவையேற்படின் கோவிட் சோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தவர்களுக்கான தடை தொடரவுள்ளதாகவும் இத்தடையை நீக்குவது தொடர்பில் அடுத்த வாரம் மீளாய்வு செய்யப்படும் எனவும் Premier Mark McGowan தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
