மேற்கு ஆஸ்திரேலிய மக்களுக்கு அம்மாநில அரசு 600 டொலர்களுக்குரிய மின்மானியத்தை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இடர்கால பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்துவரும் மக்களுக்கு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பேருதவியாக அமையும் என்று தான் நம்புவதாக மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan கூறியுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த மின்சார மானியத்தின் பின்னணியில் எந்த நிபந்தனையும் கிடையாது என்றும் இந்த 600 டொலர்களும் பாவனையாளர்களின் மின்கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவுள்ள கிறிஸ்மஸ் காலத்தில் மாநிலத்தின் சிறிய வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பொருளாதார ரீதியில் நிச்சயம் சிறியதொரு ஆற்றுப்படுத்துகையாக அமையும் என்று மாநிலத்தின் Premier Mark McGowan நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Share
