வங்கி விதிகளை மீறிய குற்றத்துக்காக ஆஸ்திரேலிய வரலேற்றிலேயே அதிகூடிய அபராத தொகையான 1.3 பில்லியன் டொலர்களை செலுத்துவதற்கான ஏற்பாட்டுக்கு Westpac வங்கி இணங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பணமோசடிக்கும் பயங்கரவாதிகளுக்கான உதவிக்கும் எதிரான நாட்டின் சட்டங்களை மதிக்காமல் வங்கிப்பரிவர்த்தனைகள் தொடர்பில் உரிய முறைப்பாடுகளை மேற்கொள்ளத்தவறியதற்காக இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Westpac வங்கி மீதான இந்த விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த விசாரணையின் முடிவில் Westpac வங்கிக்கும் AUSTRAC எனப்படுகின்ற Australian Transaction Reports and Analysis Centre-க்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
19.6 மில்லியன் தடவைகள் Westpac வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுமார் 11 பில்லியன் டொலர்கள் பெறுமதியான - முறைப்பாடு செய்யப்படவேண்டிய - பணப்பரிவர்த்தனைகள் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தவறியதாகவும், இதன் மூலம் சுமார் 23 மில்லியன் தடவைகள் வங்கி விதிகளை Westpac மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
