SKIP TO MAIN CONTENT

Westpac வங்கி: 10,000 டொலர்களுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை முறையிடாததில் சிக்கல்?

A Westpac outlet in Sydney.
A Westpac outlet in Sydney. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

பத்தாயிரம் டொலர்களுக்கு அதிகமான பணப்பரிவர்த்தனை - Threshold Transaction Report (TTR) - தொடர்பான விவரங்களை சரியாக பேணத்தவறியமை உட்பட அந்தப் பணபரிவர்த்தனை தொடர்பில் ஆஸ்திரேலிய நிதிக்குற்றவியல் கண்காணிப்பு ஆணையகத்துக்கு (AUSTRAC) - முறைப்பாடு செய்யாதமை ஆகியவை தொடர்பில் Westpac வங்கி பாரிய சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளதாக SMH ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்தாயிரம் டொலர்களுக்கு அதிகமாக இடம்பெற்ற சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணப்பரிவர்த்தனைகளை Westpac வங்கி AUSTRAC கவனதுக்கு கொண்டுசெல்லவில்லை என்றும் இது Westpac வங்கி கடந்த தடவை முறைப்பாடு செய்யத்தவறிய எண்ணிக்கையிலும்விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கென்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட வங்கி பணப்பரிவர்த்தனைகள் தொடர்பிலான மூன்று லட்சத்து 65 ஆயிரம் அறிக்கைகளிலும் தவறிழைத்திருப்பதாக AUSTRAC கூறியுள்ளது.

வங்கியின் தரப்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டபோது, தங்களது எல்லா அறிக்கைகளும் தவறென்று அர்த்தமில்லை என்றும் AUSTRAC-இன் சட்டவரையறைகளை சிலவேளைகளில் திருப்திசெய்யாதவையாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now