நீங்கள் வாழும் பகுதியில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்?

நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, சில இலக்குகளை எட்டியும் விட்டது. நீங்கள் வசிக்கும் இடத்தில், உங்கள் உள்ளூராட்சிப் பகுதியில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டு விட்டார்கள் என்று அறிய ஆவலா? தொடர்ந்து படியுங்கள்.

A snapshot of the data taken in September 2021.

A snapshot of the data taken in September 2021. Source: SBS News

மக்கள் பலரின் மனதில் தற்போதுள்ள ஒரே கேள்வி இதுதான் – “முடக்க நிலைக்கு முந்தைய இயல்பு நிலைக்கு, நம் வாழ்க்கை எப்போது திரும்பும்?”

நாட்டின் தடுப்பூசி இலக்குகளை நாம் எப்போது அடைவோம் என்பதைப் பொறுத்தது – என்பது தான் பதில்!

இந்த ஆண்டின் இறுதிக்குள் 80 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விடுவார்கள் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்.  அத்துடன், 76 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் முதற் சுற்றைப் போட்டுள்ளார்கள். 

Search for your location below. This data is updated weekly.

எந்த மாநிலத்தில் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள்?

ACTயில் வசிப்பவர்களில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 61 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளனர் (செப்டம்பர் 26ஆம் தேதி பெற்ற தரவு).

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 70 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுவிட்டால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 85 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையும், 61 சத வீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுள்ளனர்.

டாஸ்மேனியா மாநிலத்தில் 80 சதவீத மக்கள் நவம்பர் மாத தொடக்கத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விடுவார்கள் என கணிப்புகள் சொல்கின்றன.  ஏற்கனவே 56 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விடுவார்கள்.

விக்டோரிய மாநிலத்தில், 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போடும்வரை மெல்பன் நகரில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.  இது, அக்டோபர் இறுதி வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்டோரிய மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 47 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்.  குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த எண்ணிக்கை 45 சதவீதமாக உள்ளன.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழும் பூர்வீக பின்னணி கொண்ட மக்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்ள 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் 2022 வரை ஆகலாம் என்று கணிப்புகள் சொல்கின்றன.

Northern Territory பிராந்தியத்தில் 51 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஏன் 70 சதவீதம்?

முடக்க நிலை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், மக்கள் கொரோனா வைரஸுடன் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநில மற்றும் பிராந்திய தலைவர்களிடம் பிரதமர் Scott Morrison கூறியுள்ளார்.

முடக்க நிலையிலேயே நாடு தொடர முடியாது என்றும் 70 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனாவைரஸ் குறித்த அனைத்து செய்திகளையும் தமிழ் மொழியில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

Interactive by Ken Macleod. Lead artwork by Jono Delbridge.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

2 min read

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS News




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now