ஆஸ்திரேலியாவின் புதிய பாஸ்போர்ட்கள் மக்களை சிரிக்க வைக்கின்றன - ஆனால் அவர்களின் புகைப்படங்களில் இல்லை.
ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு அலுவலகம் அதன் புதிய R சீரிஸ் பாஸ்போர்ட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது, இதில் நாட்டின் மிகவும் பிரபலமான இடங்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூர்வீக கலைஞர்களின் கலைப்படைப்புகள் உள்ளடங்கியுள்ளது.
புதிய கடவுச்சீட்டுகளில் அடையாள திருட்டை தடுக்க வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
புதிய கடவுசீட்டின் முன் மற்றும் பின் அட்டைப் பக்கங்கள் கடற்கரைகளைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் வீசா பக்கங்கள் 17 ஆஸ்திரேலிய நிலப்பரப்புகளின் படங்கள் மூலம் ஆஸ்திரேலியா முழுவதும் காட்சிப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இயற்கைக் காட்சிகள் பாதுகாப்பு விவரமாக இரட்டிப்பாகின்றன, ஒவ்வொரு படத்திலும் உள்ள வானம் புற ஊதா ஒளியின் கீழ் இரவுக் காட்சியாக மாறும் மற்றும் மறைந்திருக்கும் பூர்வீக விலங்கினங்களைக் காட்டும்.
ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் அலுவலகத்தின் படி, ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுகளில் முதல் முறையாக கடவுச்சீட்டுபக்கம் "கடினமான, உயர் பாதுகாப்பு, அடுக்கு பிளாஸ்டிக்" மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாலிகார்பனேட் என்றும் அழைக்கப்படும் பிளாஸ்டிக் மீது புகைப்படம் மையினால் அச்சிடப்படுவதற்குப் பதிலாக லேசர்யினால் பொறிக்கப்பட்டிருக்கும், மேலும் புகைப்படங்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தோன்றும்.

ஆஸ்திரேலியாவில் ஏன் புதிய கடவுச்சீட்டு, இன்னும் எனது பழைய கடவுச்சீட்டை நான் பயன்படுத்தலாமா?
கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது,
மேலும் இப்புதிய R தொடர் 2015 முதல் திட்டமிடப்பட்டுள்ளது. உங்களிடம் B சீரிஸ் அல்லது N சீரிஸ் பாஸ்போர்ட் இருந்தால், அது காலாவதியாகும் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த எவரும் R சீரிஸைப் பெறுவார்கள்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணங்கள் மற்றும் செயல்முறை அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய பாஸ்போர்ட் விண்ணப்ப பரிசீலனையில் தாமதத்தை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
