Provisional approval என்றால் என்ன?
உண்மையில் இங்குள்ள TGA என்ற Therapeutic Goods Administration மருந்துப்பொருட்கள் அதிகார அமைப்பு, Moderna vaccine இற்கு provisional determination என்ற அனுமதியைத்தான் வழங்கியிருக்கிறது. இதற்கு அடுத்தகட்டமாக Moderna, provisional registration என்ற அனுமதிக்காக விண்ணப்பம் செய்யவேண்டும். அதன்பின்பு, இந்த தடுப்புமருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் என்பவற்றை TGA உறுதி செய்த பின்பு இங்கு அதைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கும். அதன்பின்பு இது மக்களுக்கு வழங்கப்படும். ஒருகோடி Modena vaccine doseகள் அடுத்தமாதம் இறக்குமதியாகும் என்றும் மிகுதி ஒன்றரைக் கோடி அடுத்த வருடம் வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த Moderna vaccine எங்கு தயாரிக்கப்படுகிறது. எந்தெந்த நாடுகள் இப்போது Modernaவைப் பயன்படுத்துகின்றன?
அமெரிக்காவிலுள்ள National Institute of Allergy and Infectious diseases என்ற அமைப்பும் Bio medical Advanced Research and Development Authority என்ற அமைப்பும் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்துதான், Moderna Covid 19 vaccine. இந்த தடுப்புமருந்து சில பிராந்தியங்களில் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கும், சில பிராந்தியங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் செலுத்தப்படுவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
65 இற்கும் மேற்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் Moderna தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன. இந்த தடுப்பு மருந்துக்கான phase 1 clinical trials அமெரிக்காவிலும், phase 2 trials அமெரிக்கா , இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும், phase 3 trials அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் இடம் பெற்றன.

Health Minister Greg Hunt expects Moderna coronavirus jab will be available to young Australians soon. Source: AAP
Covid 19 இற்கு எதிராக இதுவரை 21 வேறுபட்ட தடுப்புமருந்துகள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. ஆனால் சில தடுப்புமருந்துகள் ஓரிரு நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
Moderna, Astrazeneca, Pfizer, Covishield, Sinopharma, Sputnik 5 , Johnson and Johnson ஆகிய 7 தடுப்பு மருந்துகள் மட்டுமே சர்வதேசரீதியாக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது இங்கு ஏற்கனவே பயன்படுத்தப்படும் Pfizer மற்றும் Astrazeneca தடுப்பு மருந்துகளுக்கும் Moderna வுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் அல்லது வேறுபாடுகள் எவை?
Moderna வுக்கும் Pfizer இற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உண்டு. பிரதானமான ஒற்றுமை என்ன என்று பாரத்தால், இரண்டிலுமே messanger RNA என்ற மரபணுவின் சந்ததிச்சுவட்டை அடிப்படையாக வைத்து virus இன் spike protein வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த spike protein உடலுக்குள் செலுத்தப்பட்டதும் எமது உடலிலுள்ள immune system என்ற நோயெதிர்ப்புச்சக்தி அதை coronavirus உடலில் புகுந்ததாக இனங்கண்டு antibodies களை உற்பத்தி செய்கிறது. இந்த spike protein கள் முழுமையான வைரஸ்களல்ல என்பதால் அவை உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்த முடியாது. நோயெதிர்புச்சக்தியை மட்டுமே தூண்டிவிடும்.
உற்பத்தி செய்யப்பட்ட antibodies என்ற ‘எதிர்ப்புரதம்’ அல்லது ‘எதிர்மம்’ உடலில் இருக்கும். உண்மையான வைரஸ் உடலில் நுழைந்தால் போரிட்டு அவற்றை வெளியேற்றும். மேலும் antibodies தேவைப்பட்டாலும் immunity system அதை உற்பத்தி செய்யும்.

Vials of Pfizer vaccine (AAP) Source: AAP
ஒவ்வாமை என்ற allergic reactions உள்ளவர்களுக்கு anaphylaxis என்ற பாரதூரமான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் இவர்கள் இந்த தடுப்பூசிகளைப் பெறமுன் வைத்திய ஆலோசனை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இரத்த உறைவு blood clotting என்ற நிலைமையைச் சீர் செய்ய மருந்துகளைப் பயன்படுத்துவோரும் Moderna வைப் பயன்படுத்த முன் வைத்தியரின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவையிரண்டிற்குமுள்ள வேறுபாடுகள் என்று பார்க்கும்போது,
- Pfizer 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொடுக்க முடியும் ஆனால் Moderna 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொடுக்க முடியும்.
- Moderna வைப் பொறுத்த அளவில் சில நாடுகளில் மாத்திரம் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு உகந்தது என்று தரவுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- Pfizer ஐப் பொறுத்தவரை முதலாவது மற்றும் இரண்டாவது dose களுக்குடையேயான இடைவெளி 21 நாட்கள்.
- Moderna வுக்கு 28 நாட்கள். Pfizer -75C என்ற குளிர்பதன நிலையிலும் , Moderna -20C என்ற குளிர்பதன நிலையிலும் பத்திரப்படுத்தப்படவேண்டும்; மற்றும் இடத்திற்கிடம் கொண்டு செல்லப்படும் போது இந்த குளிர் நிலை பேணப்படவேண்டும்.

Duas mortes de um homem e uma mulher na faixa dos 40 anos em decorrência de complicações por trombose tem relação com primeira dose da AstraZeneca. Source: AAP Image/AP Photo/Chiang Ying-ying
தற்போது இங்கு பயன்படுத்தப்படும் Astra Zeneca இவையிரண்டிலுமிருந்து மாறுபட்டது- அப்படித்தானே?
தற்போது பயன்பாட்டிலிருக்கும் AstraZeneca தடுப்புமருந்து மாறுபட்ட தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. சாதாரண சளிச்சுரத்தை ஏற்படுத்தும் வைரஸ்கள் பலவீனப்படுத்தப்பட்டு, மாற்றப்பட்டு அவற்றின் மீது corona virus இன் spike protein இணைக்கப்பட்டு உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இது உடலுக்குள் சென்றதும் உடலின் immunity system முடுக்கிவிடப்பட்டு ஏராரளமான antibodies கள் உருவாகின்றன. நோயை ஏற்படுத்தும் corona virus உடலில் புகுந்தால் அதை உடலின் immune system இனங்கண்டு மேலும் ஏராளமான antibodiesகளை உருவாக்கி corona virus களை அழித்துவிடும்.
Moderna காலப்போக்கில் இங்கு தயாரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறதே?
ஆமாம். mRNA வகை தடுப்பு மருந்துகளை அதாவது Pfizer, Moderna போன்ற வகை தடுப்பூசிகளை இங்கு தயாரிக்கவேண்டும் என்றே ஆஸ்திரேலியா விரும்புகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்வதில் எந்த தாமதமும் இருக்காது என்பதே எதிர்பார்ப்பாகும். இங்கு Astrazeneca தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் CSL -Commonwealth Serum Laboratory உட்பட பத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இந்த mRNA வகை தடுப்ப மருந்துகளைத் தயாரிக்க ஆர்வம் காட்டிவருகின்றன. ஆனால் Pfizer இங்கு ஆஸ்திரேலியாவில் தனது தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் நோக்கம் இல்லை என்று அறிவித்திருக்கிறது. ஆகவே Moderna மட்டுமே இங்கு தயாரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இது இப்போது அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.