கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்: உடற்பயிற்சிக்காக வெளியில் செல்லலாமா?

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின்கீழ் உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் நீச்சல் தடாகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளநிலையில் உடற்பயிற்சிக்கு என்ன செய்யலாம் என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். குறிப்பாக உடற்பயிற்சிக்காக வெளியில் செல்லலாமா என்ற கேள்வியும் எழக்கூடும்.

Chatswood Golf Club

Dois jogadores no Chatswood Golf Club, em Sydney. Source: SBS News

கொரோனா வைரஸ் கோவிட்-19 பரவலிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் நாம் வீடுகளிலேயே தங்கியிருக்கிறோம்.

வீட்டில் தங்கியிருப்பது மட்டுமல்லாமல் முடிந்தவரை நம்மைச் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது அவசியமாகும்.

ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின்கீழ் உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் நீச்சல் தடாகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளநிலையில் உடற்பயிற்சிக்கு என்ன செய்யலாம் என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். குறிப்பாக உடற்பயிற்சிக்காக வெளியில் செல்லலாமா என்ற கேள்வியும் எழக்கூடும். அதற்கான பதிலைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலிய அரசின் உத்தியோகப்பூர்வ அறிவுறுத்தல் என்ன?

கொரோனா வைரஸ் கோவிட்-19 பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளி நடவடிக்கையின்கீழ், உங்கள் சுற்றாடலிலுள்ள பூங்கா போன்ற இடத்திற்கு உடற்பயிற்சிக்கென தனியாகவோ அல்லது இன்னொருவருடனோ செல்ல அனுமதியுண்டு.

உங்களுடன் வரும் மற்றையநபர் உங்களோடு ஒரே வீட்டில் வசிக்காதவராகஇருந்தால் உரிய முறையில் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

உடற்பயிற்சிக்கு என்னென்ன இடங்கள் திறந்திருக்கின்றன?

உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் தடாகங்கள் போன்றவை மூடப்பட்டிருந்தாலும் விக்டோரியா தவிர பெரும்பாலான மாநிலங்களில் golf clubs மற்றும் சிறியளவிலான பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் சமூக இடைவெளி நிபந்தனைக்கு உட்பட்டு தொடர்ந்தும் இயங்குகின்றன.

வேறு என்ன வழிகளில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம்?

தற்போது பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் உடல் இயக்கம் பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது வைரசுக்கெதிரான மிகமுக்கிய பாதுகாப்பு பொறிமுறையாகும்.

எனவே வீட்டிலிருந்தவாறே முடிந்தவரை உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஒருநாளைக்கு எத்தனை steps நடக்கிறீர்கள் என்பதையும் கணக்கிட்டுப்பார்த்து அதற்கேற்ப steps–ஐ அதிகப்படுத்தலாம்.
Gym owner John Salter
John Salter, proprietário de uma academia em Sydney, treina em sua casa. Source: Supplied

இணையவழி உடற்பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள்

பெரும்பாலான உடற்பயிற்சிக்கூடங்கள் தற்போது இணையவழி பயிற்சிகளை வழங்குகின்றன.

ஆனால் உடற்பயிற்சி செய்வதற்குரிய கருவிகள் இல்லையே எனச் சிலர் வருந்தக்கூடும். இன்னும் சிலருக்கு உடற்பயிற்சி உபகரணங்களை கடைகளில் வாங்கமுடியாதிருக்கலாம். ஏனெனில் அவை விரைவாக விற்றுத்தீர்ந்துவிடுகின்றன.

கவலை வேண்டாம். உடற்பயிற்சி செய்வதற்கு வெறுந்தரையே போதுமானது என்கின்றனர் உடற்பயிற்சி வல்லுநர்கள். உங்களிடம் dumbbells/barbell இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் வேறு  பாரமான பொருட்களைக்கூட பயன்படுத்தலாம் என அவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
Online exercise is the new norm (Supplied)
Online exercise is the new norm (Supplied) Source: Supplied

மனநலத்தை மேம்படுத்துவது எப்படி?

நமது உடல்நலம் எந்தளவு முக்கியமானதோ அதேயளவு மனநலனும் இன்றியமையாதது. எனவே நமது மனநலத்தைப் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் நாம் கவனம்செலுத்த வேண்டும்.

மனச்சோர்வடைந்தால் மிதமான நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொள்வது நன்மை பயக்கும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகக்குறைந்தது 20 நிமிடங்கள் வாரத்திற்கு 3 தடவைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மனநலத்திற்கு அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதவிர மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

கொரோனா வைரஸ் கோவிட-19 குறித்து கவலை அல்லது பீதியடைபவர்கள் Head to Health என்ற இணையத்தளத்தினூடாக உதவி பெறலாம் என ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

 

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர்  சமூக இடைவெளியைப்  பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share

Published

Updated

By Matt Connellan
Presented by Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand