இந்த புதிய தொழில்நுட்பத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டுமெனில், சந்தையில் தற்போதுள்ள தொலைக்காட்சி தொடர்பான தொழில்நுட்பத்தை நாம் ஓரளவு புரிந்துகொள்ளவேண்டும்.
தொலைக்காட்சி தொடர்பான தொழில்நுட்பங்கள் என்ன?
Cathode ray tubes என்ற குழாய்களின் ஒரு அந்தம் திரையாக அமைந்த தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தாண்டி நாம் வெகு தூரம் வந்துவிட்டோம். LCD, LED போன்ற flat screen திரைகள் வந்த பிறகு யாரும் ‘தொலைக்காட்சி பெட்டி’ என்று சொல்வதில்லை. அவை வெறுமனே தொலைக்காட்சி television என்று ஆகிவிட்டன.
Plasma மற்றும் LCD என்ற Liquid Crystal Display திரைகள் வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பின் LED திரைகள் -Light Emitting Diode 2005இல் வந்தது. அதன்பின்பு OLED -Organic Light Emitting Diode 2008 இல் வந்தது. 2013 இல் அறிமுகமாகி தற்போது QLED Quantum Light Emitting Diode திரைகள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இப்போது அதையும் விஞ்சி QD OLED- Quantum Dot Light Emitting Diode தொழில்நுட்பத்தில் அமைந்த தொலைக்காட்சிகள் அண்மையில் அறிமுகமாகியுள்ளன.

QD OLED- Quantum Dot Light Emitting Diode என்றால் என்ன?
CES 2022- Consumer Electronic Show என்ற நுகர்வோருக்கான electronic என்ற வகையில் உலகில் மிகப்பெரிய கண்காட்சி, அமெரிக்காவில் Las Vegas இல் நடந்து முடிந்திருக்கிறது. தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் Sony, Samsung, LG, Panasonic மற்றும் TCL, Hisense போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு (2022) தாங்கள் சந்தைக்கு கொண்டுவரவிருக்கும் புதிய தொழில்நுட்பத்தில் அமைந்த Quantum Dot OLED மற்றும் மேம்படுத்திய QLED, LCD மற்றும் LED தொலைக்காட்சிகளின் ஏராளமான மாடல்களை இந்த கண்காட்சியில் வைத்திருந்தார்கள். இப்போது சந்தையில் இருக்கும் தொலைக்காட்சிகளில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள் பலவற்றை களையும் வண்ணமாக வடிவமைக்கப்பட்ட Quantum Dot OLED தொலைக்காட்சிகள் தான் இந்தக்கண்காட்சியில் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளன.
Quantum dot TV எதிர்காலத்தில் பிரதான தொழில்நுட்பமாகப் பார்க்கப்படும் என்றும் கணினிகளுக்கான monitor, காரில் உள்ள display screen என்பவையெல்லாம் Qdot tv தொழில்நுட்பத்திற்கு மாறிவிடும் என்றும் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
QD OLED தொழில்நுட்பத்திலுள்ள hybrid display technologyயின் சிறப்பான brightness – வெளிச்சம் மற்றும் வண்ணம் ஆகிய அம்சங்களை, quantum dots மேலும் மேம்படுத்துகின்றன. இதன் காரணமாக இதுவரை theory -கோட்பாடு மட்டத்திலேயே பேசப்பட்ட contrast மற்றும் perfect blacks என்பவற்றை QD OLED இல் கண்கூடாகப் பார்க்க முடிந்ததாக digital trends பத்திரிகையின் senior editor, Caleb Denision இந்த கண்காட்சியில் தெரிவித்தார். Samsung நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த QD OLED, தான் நினைத்ததை விட அபூர்வமாக காட்சிகளை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

OLED TV Vs QD OLED
OLED TV என்பது OLED light sourceஐ பயன்படுத்தி colour filter மூலமாக காட்சியைத் திரைக்கு கொண்டுவருகின்றன. ஆனால் QD OLED தொழில்நுட்பம் led backlight மற்றும் அதன்மீது layer ஆக உள்ள quantum dots, LCD matrix என்பவற்றைப்பயன்படுத்தி colour filter ஊடாக காட்சியைத் திரைக்கு கொண்டுவருகிறது. இதில் ஏற்படக்கூடிய சவால்களை green quantum dots சமன் செய்து 100 சதவீதமான ஆற்றலை colour accuracy மற்றும் contrast brightness என்பவற்றில் கொண்டுவருகிறது.
இப்படியான செயலை செய்வதற்கு அதிக ஆற்றல் - energy தேவைப்படும். ஆனால் QD OLED TV energy efficient குறைவான ஆற்றலைப் பயன்படுத்தும். அதாவது, மின்சக்தியை குறைவாகப் பயன்படுத்தும் என்பது மற்றொரு சிறப்பு. அதேவேளையில் புதிய QD OLED TV யில் வெளிச்சம் அதிகமுள்ளது. அத்தோடு அதன் திரை நீண்ட ஆயுளைக்கொண்டது. Pixels களும் நீண்ட ஆயுளை உடையவை. இப்படி பல சிறப்புகள் QD OLED யில் உள்ளன.
Sony யின் Quantum Dot OLED TV எப்படி?
Sony நிறுவனம் A95K QD OLED எனும் தொலைக்காட்சியை இந்த கண்காட்சியில் வைத்திருந்தது. 55 மற்றும் 65 அங்குலத்திரைகளுடன் 4K தரத்தில் அமைந்த இந்த தொலைக்காட்சிகள் வழமையான OLED க்கும் மேலாக Quantum Dot layer என்ற புது தொழில் நுட்பத்துடன் இணைந்து infinite contrast ratio என்ற முடிவில்லா contrast விகிதத்தை வழங்குகின்றன. மேலும், perfect black ratio என்ற உன்னதத்தையும், wider range of colours – வண்ணங்களில் பலதெரிவு, வேறுபாடு மற்றும் higher peak brightness - உயர்ந்த ஒளித்தெளிவு என்பவற்றை வழங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நான்கு HDMI input வசதிகளுடன் 4K 120 Hz இல் gamesகளை விளையாடுவதற்கன முழுமையான வசதி இதில் உண்டு. ஆனால் இதில் வியப்பான அம்சம் என்னவென்றால் இந்த Sony TV யின் panel என்ற திரை Samsung நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
Samsungயின் Neo QLED 8K
தொலைக்காட்சி தயாரிப்பில் உலகில் நம்பர் 1 ஆக இருக்கும் Samsung நிறுவனத்தின் Quantum LED வரிசையில் Neo QLED 8K என்ற மாடல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இது விற்பனைக்கான மாடல் அல்ல. ஆனால் Samsung மட்டுந்தான் QD OLED panelகளைத்தயாரிக்கிறது. Samsung இன் Panel களைத்தான் Sony, TCL , LG போன்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. Brightness என்ற ஒளித்தெளிவை சரியாக அமைக்க உதவும் HDR mapping என்ற தொழில்நுட்பம் இதில் அமைந்துள்ளதோடு, Artificial Intelligence - AI இதில் இணைக்கப்பட்டுள்ளதால் depth என்ற காட்சிப்பரிமாணத்தை இது வழங்கவல்லது. மேலும் அறையில் இருக்கும் ஒளிக்கு அமைய தொலைக்காட்சி காட்சிப்பரிமாணம் ஒளித்தெளிவு எனபவற்றை தானாகவே நிர்ணயம் செய்துகொள்ள இந்த AI உதவுகிறது. Active voice amplifier, object tracking sound, Space fit sound என்ற புதிய தொழில் நுட்பம் காரணமாக உயர்ந்த ஒலித்திறனும் கிடைக்கிறது.

பிற நிறுவனங்களின் தயாரிப்புகள் எப்படி?
தொலைக்காட்சி தயாரிப்பில உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் LG நிறுவனம் தனது G2 OLED evo என்ற மாடலை இந்த கண்காட்சியில் வைத்திருந்தது. இந்த மாடலில் 97 அங்குலத்திரையுடன் கூடிய தொலைக்காட்சி இதுவரை வந்த OLED திரைகளுள் மிகப் பெரியதாகும். இதில் உள்ள evo technology காரணமாக OLED இல் உள்ள பிரதான குறைபாடு என்று இதுவரை பார்க்கப்பட்டுவந்த brightness ஒளித்தெளிவு குறைபாட்டை நீக்கியிருப்பதாக இந்தத் துறையிலுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
TCL, Hisense போன்ற நிறுவனங்களும் QLED இன் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. TCL 98 அங்குல QLED TV யை அறிமுகம் செய்துள்ளது. இன்று COVID-19 காரணமாக திரையரங்குகளுக்கு போகமுடியாதவர்களுக்கு TCL இன் 98 அங்குல QLED திரையரங்கின் பிரமாண்டத்தை கொண்டுவரும் என்றபோதும் இதன் விலை சுமார் 8000 டாலர்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் Plasma / LCD போன்றவை சந்தைக்கு வந்த போது அவற்றின் விலைகள் சராசரி மக்களுக்கு கட்டுப்படியாகாதவையாக இருந்தன என்பதும் காலப்போக்கில் இவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்ததையும் நாம் அறிவோம்.
புதிய Quantum Dot OLED எப்போது சந்தைக்கு வரும்?
Sony இன் QD OLED இந்த ஆண்டு சந்தைக்கு வரும். ஆனால் microchips என்ற semi conductor களுக்குள்ள தட்டுப்பாடுகள் காரணமாக இது தாமதமாக க்கூடும். TV தயாரிப்பாளர்கள் இரு முக்கிய தேவைகளுக்காக TV panel களை, திரைகளைத் தயாரிக்கிறார்கள். Professional broadcasting என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களுக்கான TV திரைகள் 28000 டாலர்வரை ஆகக் கூடும் என்றும் நுகர்வோருக்கானவை 10000 முதல் 12000 டாலர்கள் வரை ஆகக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. படிப்படியாக அவற்றின் விலைகள் வீழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
