செருப்பு அணிந்து வாகனம் ஓட்டலாமா?

நாம் எங்கு செல்கிறோம், அந்த நேரத்தில் என்ன அணிந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து எந்த காலணி பொருத்தமானது என்பதை நாங்கள் தேர்வு செய்கிறோம். ஆனால் நாம் செல்லும் இடத்திற்கு வாகனம் ஒட்டி சென்றால் நாம் அணிந்திருக்கும் காலணிகள் வாகனம் ஓட்டுவதற்கு சிலசமயம் பொருத்தமானதாக இருக்காது.

Road Safety Day

A woman operates the pedals of a car wearing flip flops. Events will be held to draw attention to the dangers of road traffic Credit: picture alliance/dpa/picture alliance via Getty I

NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டும் போது ஒரு ஓட்டுநர் பாதணிகளை அணிய வேண்டும் அல்லது அணியாமல் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் தற்போது இல்லை. அதே போன்று என்ன காலணிகள் அணியவேண்டும் என்பதற்கும் எந்த சட்டமும் இல்லை.

இருப்பினும், விபத்து ஏற்பட்டால், விபத்துக்கான காரணம் பொருத்தமற்ற அல்லது காலணிகள் இல்லாதது என்று கண்டறியப்பட்டால், சாலை விதிகள் 2014 விதி 297 வாகனத்தின் சரியான கட்டுப்பாட்டின்றி வாகனம் ஓட்டுதல் என்ற விதியின் கீழ் குற்றமாக பதியப்படலாம். ஆகவே வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ற காலணிகளை எப்போதும் அணிந்து வாகனம் ஓட்டுவது அவசியம் என்று NRMA வலியுறுத்துகிறது.

ஹை ஹீல் ஷூக்கள், கனரக வேலை செய்யும் பூட்ஸ், செருப்பு அல்லது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் வேறு ஏதேனும் காலணிகளை அணிவது தவறான யோசனை என தெரிவிக்கப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்கு நல்ல பிடிப்புடன் இறுக்கமான ஆனால் வசதியாகவும், சூடாக இல்லாமலும் உள்ள சரியாக பொருந்தக்கூடிய ஒரு ஷூவைத் தேர்வு செய்ய வேண்டும் என்று NRMA அறிவுறுத்துகிறது.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Selvi
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
செருப்பு அணிந்து வாகனம் ஓட்டலாமா? | SBS Tamil