கார் விபத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு இருக்கும் சட்டரீதியான பொறுப்புகள் எவை?

நீங்கள் ஆஸ்திரேலியாவில் கார் விபத்தொன்றில் சிக்கிக்கொண்டால் உங்களுக்கிருக்கும் சட்டரீதியான பொறுப்புகள் குறித்த தகவல்

2017-18 இல் ஆஸ்திரேலியாவில் சாலை விபத்து தொடர்பான காயங்களுடன் 39,000 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாலை விபத்தில் சிக்கும்போது தமக்கிருக்கும் சட்டப் பொறுப்புகளைப் பற்றி புதிதாக புலம்பெயர்ந்து வந்துள்ள பலருக்கு தெரியாமல் இருக்கக்கூடும்.

விபத்துடன் தொடர்புடைய மற்ற தரப்பினருடன் விவரங்களை பரிமாறிக்கொள்வது அவசியமாகும்.

உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். மேலும் நீங்கள் வேறொருவரின் வாகனத்தை ஓட்டிச்சென்றிருந்தால், அந்த வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களையும் வழங்க வேண்டும்.
car crash, car accident
Source: Getty Images/Yellow Dog Productions
உங்கள் ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றபோதிலும், விவரங்களைப் பகிராமல் அந்த இடத்திலிருந்து செல்வது குற்றமாகும். சில சந்தர்ப்பங்களில் பொலீஸாருக்கு அறிவிப்பது முக்கியம்.

குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் நீங்கள்  பொலீஸாரை நாடவேண்டியிருக்கலாம். விபத்தில் எவரேனும் காயமடைந்தால் அதை பொலீஸாருக்கு தெரியப்படுத்துவது அவசியம்.  மேலும் யாராவது தங்கள் விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் அவர்களது வாகன பதிவு எண்ணை எடுத்துக்கொண்டு நீங்கள் பொலீஸ் நிலையத்திற்கு செல்லலாம்.

விபத்து ஏற்பட்டால் உங்களுக்கு உதவ வெவ்வேறு மோட்டார் வாகன காப்புறுதி திட்டங்கள் உள்ளன. ஒன்று உங்கள் வாகனத்திற்கான சேதம் மற்றும் வேறு ஒருவரின் வாகனத்திற்கான சேதம் ஆகியவற்றை உள்ளடக்கிய comprehensive காப்புறுதி.

இதுதான் நீங்கள் பெறக்கூடிய ஆகக்கூடிய காப்புறுதியாகும். அடுத்தது third-party fire and theft காப்புறுதி. இது வேறொருவரின் வாகனத்திற்கு நீங்கள் ஏற்படுத்தும் சேதத்தை மட்டுமே உள்ளடக்கும்- விபத்தில் உங்களது வாகனத்திற்கு ஏற்படும் சேதம் உள்ளடக்கப்படாது. நீங்கள்தான் உங்கள் சொந்த செலவில் உங்கள் வாகனத்தை சரிசெய்ய வேண்டும்.
Tow Truck Driver Lifting a Wrecked Car
Source: Getty Images
ஆனால் உங்கள் கார் திருடப்பட்டால் அல்லது தீப்பிடித்தால்  அது இந்த காப்புறுதி திட்டத்தில் உள்ளடக்கப்படும். மிகவும் மலிவானது third-party காப்புறுதி ஆகும். இந்த காப்புறுதி வேறு ஒருவரின்

சொத்துக்கு ஏற்படும் சேதத்திற்கான பொறுப்பை உள்ளடக்குகிறது. உங்களிடம் இந்த காப்புறுதி இருந்து, அதை நீங்கள் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டால் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து கிடைக்கும் சான்றுகள் மற்றும் சாட்சிகள் உதவியாக இருக்கும்.

அந்த சூழ்நிலையில் யார் தவறு செய்தார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. ஆனால் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். நீங்கள் புகைப்படங்களை எடுக்கலாம். ஈரமாக இருந்ததா? மழை பெய்ததா? எந்த திசையில் சென்றீர்கள்? என்பவை உட்பட விபத்து தொடர்பில் முக்கியமானதாக நீங்கள் கருதும் எந்த விவரங்களையும் குறித்துக்கொள்ளலாம்.
police car
police car Source: AAP/Tony McDonough
அந்த விவகாரம் பொலிஸாரிடம் சென்றால் அவர்களுடன் சேர்ந்து நீங்கள் இயங்கலாம். அல்லது உங்கள் காப்புறுதி நிறுவனத்துடன் சேர்ந்து இயங்கலாம். யார் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியும்.

எந்தவொரு சலுகையை ஏற்றுக்கொள்வது அல்லது விபத்து இடம்பெற்ற இடத்தில்வைத்து ஏதேனும் ஆவணங்களில் கையொப்பமிடுவது தொடர்பில் காப்பீட்டாளர்கள் எச்சரிக்கிறார்கள். இது காப்பீட்டுத்துறையின் மிகவும் சுவாரசியமான பக்கமாகும். காப்புறுதி வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் தனது எழுத்துமூல ஒப்புதலை பழுதுபார்க்கும் நிறுவனம் அல்லது tow firm ஒன்றுக்கு கொடுக்கிறபோது, அந்த நிறுவனத்திற்கு இது இலாபகரமாக அமைந்தாலும், இதற்கிடையில் இருக்கின்ற படிமுறைகள் மிகவும் சிக்கல் நிறைந்தவை. குறிப்பாக விபத்து நடந்த இடத்தில்வைத்து இதைச் செய்வதில் சிக்கல்கள் உள்ளன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand