SKIP TO MAIN CONTENT

செய்திகளாகும் Quad, AUKUS, Five Eyes: இவை என்ன? ஏன்?

உலகில் அண்மைக்காலமாக, சில குறிப்பிட்ட நாடுகள் இணைந்து புதிய புதிய கூட்டமைப்புகளை உருவாக்கி வருவதைப் பார்க்கமுடிகிறது. மனித வரலாற்றைப் பார்க்கும் போது, அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக, அத்தோடு புவியியல் அமைப்பின் கட்டாயம் காரணமாக, சில வேளைகளில் moral என்ற தார்மீக அடிப்படையில், சில நாடுகள் இணைந்தே செயல்பட்டுவந்திருக்கின்றன. இவ்வாறு இணைந்த இந்த நாடுகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி, பிரிவதும் எதிர் அணிகளுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதும் காலங்காலமாக நிகழ்ந்தே வந்திருக்கிறது.

 Scott Morrison QUAD leaders
Quad Leaders: Japanese Prime Minister Suga Yoshihide, Indian Prime Minister Narendra Modi, US President Joe Biden and Australian Prime Minister Scott Morrison. Source: Adam Taylor

5 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

பலமுள்ள நாடுகள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் போது, அல்லது போர்தொடுக்கும்போது நாடுகள் அணிமாறியிருக்கின்றன.  உதாரணமாக நெப்போலியனின் ஆட்சிக்காலத்தில் பிரான்ஸின் பரம எதிரியாக இருந்த இங்கிலாந்து, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சுடன் ஒரு அணியில் இணைந்து செயல்பட்டதைச் சொல்லமுடியும் . இத்தாலி இரண்டாம் உலகப் போரின் போது அணிமாறி ஜெர்மனியுடன் இணைந்து கொண்டது.

People dressed up as soldiers fight during a re-enactment of the 1815 Battle of Waterloo between the French army led by Napoleon and the Allied armies (AAP)
People dressed up as soldiers fight during a re-enactment of the 1815 Battle of Waterloo between the French army led by Napoleon and the Allied armies (AAP) Source: AFP

ஆனால் இரண்டவது உலகப் போரின் பின் அணிகளாக இணைந்த நாடுகள் அதே அணிகளில் நீடித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. உலக சமாதனம் கருதி ஒன்றிணைந்த  UNO ஐக்கிய நாடுகள் அமைப்பு, Saarc என்ற அணிசேரா நாடுகளின் அமைப்பு, NATO , European Union, African Union, 20 நாடுகள் இணைந்த OECD,  G7, எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான  OPEC, ஆசிய நாடுகள் இணைந்த  ASEAN போன்ற அமைப்புகளில் இணைந்த நாடுகள் இப்போதும் இணைந்தே இருக்கின்றன.

Members of the OPEC countries continue their conference on Monday, December 25, 1973 in Kuwait.
Members of the OPEC countries continue their conference on Monday, December 25, 1973 in Kuwait. Source: Creative Commons

சீனா, இப்போது பொருளாதார ரீதியாகவும் இராணுவரீதியாகவும், அதே நேரத்தில் வறியநாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவி வழங்கி, அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்வதன் அடிப்படையில் சர்வதேச அரசியல் ரீதியாகவும், மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. இதனால் சர்வதேச அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ  சமநிலை ஆட்டம் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் சீனாவின் அதிரடியான நடவடிக்கைகள் காரணமாக பல நாடுகளின் ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் இழக்கப்பட்டுவருகின்றன . மற்றும் சீனாவின் இராணுவ தலையீடு காரணமாக தென்சீன கடற்பரப்பில் அமைதியின்மை உருவாகியிருக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்வது அல்லது சீனாவை அடக்கிவைப்பதுதான் நோக்கம் என்றபோதும், அதை வெளிப்படையாக க் குறிப்பிடாமல், தமது நாடுகள் எதிர்நோக்கும் இன்னோரன்ன பொதுவான பிரச்சனைகளை மையமாக வைத்து இணைவதாக சில குறிப்பிட்ட நாடுகள் இப்போது அணிகளாக இணைந்திருக்கின்றன.

ASEAN leaders during their meeting at the ASEAN Secretariat  in Jakarta, Indonesia, Saturday, April 24, 2021.
ASEAN leaders during their meeting at the ASEAN Secretariat in Jakarta, Indonesia, Saturday, April 24, 2021. Source: Indonesian Presidential Palace

QUAD: ஒரு விளக்கம்

QUAD leaders meeting White House
Prime Minister Scott Morrison attends the White House in Washington DC for the QUAD leaders meeting, September 24, 2021. Source: Adam Taylor

Quad என்றால் நான்கு என்று பொருள்படும்.  ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் இந்த அமைப்பில் இருக்கின்றன.  அதிகரித்துவரும் சீனாவின் வலிமை மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அபிலாஷைகள் என்பவற்றை கையாள்வது மற்றும் பரஸ்பரம் உறுப்பு நாடுகளுக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற நோக்கங்களுடன் QUAD என்ற ஒரு அமைப்பை உருவாக்குவதுபற்றி 2007 ஆண்டளவிலேயே பிரஸ்தாபிக்கப்பட்டபோதும் அப்போது சீனா இது குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. ஆனால் 2017இல் இது ஒரு அமைப்பாக வடிவம் பெற்றது.

சீனா கண்டனம் வெளிப்படுத்தியது

QUAD அமைப்பின் வெளிப்படையான நோக்கம் பிராந்தியத்திலுள்ள உறுப்பு நாடுகளைப்பாதிக்கும் பிரச்சனைகளை ஆராய்வதற்கான இராஜதந்திர மட்டத்திலான ஒரு forum களமாக செயல்படுவதோடு அப்பிரச்சனைகளைத்தீர்க்க உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவதுதான் என்றபோதும் இந்த அகண்ட நிகழ்ச்சி நிரல் வழியாக சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்க த் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் மறைமுகமாக அடங்கியிருக்கிறது. அத்துமீறல்கள் என்று சொல்லும்போது, சீனா இந்த பிராந்தியத்தில் goods and services என்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் பெறுமதியை தீர்மானிக்க முயல்வது; முதலீடு மற்றும் எளிதாக க் கிடைக்காத வளங்கள் தொழில் நுட்பம் என்பவற்றில் ஏகபோக அதிகாரத்தை நிலைநிறுத்த முயல்வது; சர்வாதிகாரத்திற்கு துணைபோவது மற்றும் ஜனநாயக ஆட்சி முறை அமைந்துள்ள நாடுகளின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்துவது; தென்சீன கடல் பரப்பு மற்றும் தாய்வான் போன்ற நாடுகளை ஆக்கிரமிக்க முயல்வது என்பவையும் அடங்கும்.

China's aircraft carrier passes south of Taiwan
China's aircraft carrier passes south of Taiwan Source: AAP

2019 இல் இந்த நான்கு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் பங்குபற்றிய QUAD மாநாடு ஒன்று ஐக்கிய நாடுகள் சபை யில் ஒரு அரங்கில் நடைபெற்றது. 2020 இல் பிரதானமாக covid 19 தொடர்பான பிரச்சனைகளை ஆராயும் நோக்கத்தோடு QUAD plus என்ற பெயரில் phone conference ஒன்று இடம் பெற்றது.  அமெரிக்க அதிபர் Joe Biden பதவிக்கு வந்தபின்பு அவரது தலைமையில் virtual QUAD leaders meeting என்ற பெயரில் இணைய வழி ஒன்றுகூடல் ஒன்று இடம் பெற்றது. இந்த QUAD  அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொண்ட உச்சிமாநாடு வாஷிங்டன் நகரில் சென்ற வாரம்  இடம்பெற்றது.

AUKUS என்றால் என்ன?

Prime Minister Scott Morrison holds a joint press conference with US President Joe Biden and British Prime Minister Boris Johnson.
Prime Minister Scott Morrison holds a joint press conference with US President Joe Biden and British Prime Minister Boris Johnson. Source: AAP

AUKUS என்பது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான three way மூன்று வழி defence - பாதுகாப்பு இணக்கப்பாட்டிற்கான அமைப்பாகும். ஆரம்ப கட்டமாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களைக் கட்டுவதற்கான தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்துகொள்ளும் அதே வேளையில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கமும் அச்சுறுத்தலும் அதிகரித்துவரும் பின்னணியில் புதிய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்படுவதும் இதில் அடங்கும். அமெரிக்கா முதன்முறையாக இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடொன்றுடன், அதாவது ஆஸ்திரேலியாவுடன் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான தொழில் நுட்பத்தைப்பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது.

AUstralia + UK + USA = AUKUS

இந்த AUKUS அமைப்பின் செயல்பாடுகள் அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல் தொழில் நுட்பத்தைப் பகிர்வதோடு நின்று விடாது என்றும், இன்றைய சூழலில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்வதும் அதன் பிரதான பணியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் Joe Biden அண்மையில் தெரிவித்திருக்கிறார்.

THE FIVE EYES: பின்னணி என்ன?

Scott McLeod (Australia), Scott Jones (Canadia), Jan Thornborough (New Zealand), Ciaran Martin (UK) Rob Joyce (US) during a Five Eyes session, April 24, 2019.
Scott McLeod (Australia), Scott Jones (Canadia), Jan Thornborough (New Zealand), Ciaran Martin (UK) Rob Joyce (US) during a Five Eyes session, April 24, 2019. Source: Press Association

இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இணைந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது UK-USA என்ற பெயரில் அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் தமது எதிரி நாடுகளான ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், போரின்போது பயன்படுத்திய codes என்ற குறிமுறைகளை  எப்படி decode விரிவாக்கம் செய்வது என்பது தொடர்பாக இணைந்து செயல்பட்டன. போர் வியூகங்கள், கட்டளைத் தளபதிகளுக்கான செய்திகள், எதிரிகளின் படைபலம், எதிரிகள் முன்னேறும் வழிகள், அவர்களது படைகள் நிலைகொண்டுள்ள தூரம் என்பன பற்றிய தகவல்கள் எல்லாம் ரகசிய code என்ற மறைமுக குறியீடுகள் மூலமாகவே வானொலியைப் பயன்படுத்தி பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஜெர்மனி தனது கட்டளைகளை enigma என்ற இயந்திரத்தின் மூலமாக encrypt செய்து ரேடியோ தொடர்பு மூலமாக தனது போர்க்கள முன்னிலை  தளபதிகளுக்கும் அனுப்பிக்கொண்டிருந்தது. பிரிட்டன் Typex என்ற கருவிமூலமாக அதை de crypt செய்து உளவறிந்துகொண்டது. இதை அறியாத ஜெர்மனி, மிக அந்தரங்கமான செய்திகளைப் பரிமாறியதோடு வேறு பல encrypt கருவிகளையும் பயன்படுத்தத்தொடங்கியது. அப்போது பதவியிலிருந்த பிரிட்டிஷ் பிரதமர் Winston Churchill கட்டமைத்த decrypting மற்றும் decoding வசதிகள் காரணமாக எதிரிகளின் ஒவ்வொரு முனைப்பையும் தடமறிந்து செயல்பட்டதன் காரணமாகவே ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள்  இரண்டாம் உலகப்போரில் தோல்வியடைந்ததாக வரலாறு சொல்கிறது.

Metro Icons - World War
World War icons in Metro style. EPS 10. AI, PDF & transparent PNG of each icon included. Source: iStockphoto

இந்த பணியில் அமெரிக்க நிபுணர்களும் இங்கிலாந்து நிபுணர்களும் இணைந்து செயல்பட்டார்கள். போரின் பின்னரும் இந்த கூட்டு முயற்சி தொடர்ந்தது. இதில் ஆஸ்திரேலிய, கனடிய மற்றும் நியூஸீலந்து நிபுணர்களும் 1948 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் இணைந்து கொண்டார்கள். இந்த ஏற்பாடு 2000 வரை ரகசியமாகவே இருந்தது. 2010 இல் இது தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டதன்பின்பு இப்போது, தனிமனிதர், நாடுகள் மற்றும் அமைப்புகள் சம்பந்தப்பட்ட இணயவழிதொடர்புகளில் பரிமாறப்படும் தரவுகள் மற்றும் தகவல்கள் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு தொடர்பான சவால்களை இனங்கண்டு அவற்றைப்பகிர்வது இந்த Five Eyes அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. Intelligence priorities- உளவுத்துறை தொடர்பான முதன்மை நிலைப்பாடுகள், proliferation of weapons of mass destruction - பெருந்திரளான மக்களை  க்கொன்றுகுவிக்க க்கூடிய ஆயுதங்களை தயாரித்துவருவோர் தொடர்பான தகவல்கள்,  military and weapons development இராணுவ மற்றும் போர் ஆயுதங்களை விஸ்தரித்தல் பற்றிய தகவல்கள் என்பவற்றைத் திரட்டுவது தொடர்பாகவும் இந்த அமைப்பு இணைந்து பணியாற்றுகிறது.

Espionage
Source: iStock.com

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now