வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவில் என்ன வேலை செய்யலாம்?

457 வீசாவிற்குப் பதிலாக அறிமுகமாகும் புதிய வீசா

457 Visa applicants

Source: Creative Commons

இந்தப் புதிய வீசாவில் என்ன மாற்றங்கள் அறிமுகமாகின்றன என்பதைப் பார்க்கமுன், 457 வீசா என்றால் என்ன என்று பார்ப்போம்.

 

  • ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வணிக திறமை கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் அனுமதி.
  • இந்த வீசா எத்தனை பேருக்கு வழங்க முடியும் என்ற உச்ச வரம்பு கிடையாது.  இந்த வீசாவில் ஆஸ்திரேலியா வருபவர்கள் எத்தனை முறை ஆஸ்திரேலியாவிற்கு வெளியே சென்று வர முடியும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை.
  • வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை வேலை செய்வதற்கோ, அல்லது கல்வி கற்பதற்கோ ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர முடியும்.
  • தொழில் நிலையங்கள் அல்லது முதலாளிகள், அரசாங்கத்துடன் முறையான ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் அல்லது 457 தொழிலாளிக்கு உத்தரவாதமளித்து விண்ணப்பிக்கலாம்.
  • உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவதை நிரூபிக்க வேண்டும்.
  • 2016 (கடந்த வருடம்) செப்டம்பர் 30ம் நாள் 95,757 தொழிலாளர்கள் 457 வீசாவுடன் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். 76,430 பேர், அவர்களுக்குத்துணையாக (அவர்களது குடும்ப உறுப்பினர்கள்) ஆஸ்திரேலியாவில் வாழ்த்தார்கள்.
  • இந்த எண்ணிக்கையில் 9.2 சதவீத சரிவு மார்ச் மாதத்தில் காணப்பட்டது.
  • இந்த வீசா, ஜூலை 2013ல் அறிமுகப் படுத்தப்பட்டது.  அதில் சட்ட மீறல் செயற்பாடுகளை விசாரிக்கும் உரிமையும் Fair Work Australiaவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
  • ஒரு வேலை நான்கு வாரங்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் பொருத்தமானவர் கிடைக்காவிட்டால் மட்டுமே ஒரு வெளிநாட்டவர் வேலைக்கமர்த்தப்பட வேண்டும் என Labor கட்சி குரல் கொடுத்து வந்தது.

வெளிநாட்டவர்களை ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய அனுமதிக்கும் 457 வீசா திட்டம் நிறுத்தப்படுகிறது என பிரதமர் Malcolm Turnbull, ஏப்ரல் 18 செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.  அத்துடன், முற்றிலும் புதிய தற்காலிக திறன் பற்றாக்குறை (Temporary Skill Shortage - TSS) வீசா அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

 

TSS வீசா திட்டத்தில், இரண்டு வகை வீசாக்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.  இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் குறுகிய வீசா மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இடைக்கால வீசா.  இந்த இரண்டுமே, தொழில்துறையில் ஏற்படும் திறமையின் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, வெளிநாட்டவரை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர வழங்கப்படும் வீசாகளாக இருந்தாலும், ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கப் போதுமான கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.

 

அறிமுகமாகும் மாற்றங்களில் முக்கியமான விடயங்கள்:

  • புதிய தற்காலிக திறன் பற்றாக்குறை (Temporary Skill Shortage - TSS) வீசா பெறுவதற்குத் தேவையான சில விடயங்கள்.
    • ஆஸ்திரேலிய தொழிற் சந்தையில் தேவைப் படும் திறமைகளை மையப்படுத்தி, அதனை நிவர்த்தி செய்ய ஒரு புதிய பட்டியல்,
    • விண்ணப்பதாரர்கள், குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம் கொண்டவர்களாக் இருக்க வேண்டும்,
    • ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவரைப் பணிக்கமர்த்த முடியாது,
    • ஒரு சர்வதேச கடமையாக இல்லாதவரை, தொழிலாளர் சந்தையில் பொருத்தமான ஒருவரை உள்ளூரிலேயே தேட வேண்டும்,
    • குறுகிய கால வீசாவில் வரும் ஒரு தொழிலாளி, ஒரே ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டே வீசாவைப் புதுப்பிக்க முடியும்,
    • இடைக் கால வீசாவில் வரும் ஒரு தொழிலாளி, மூன்று வருடங்களின் பின்னரே ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டே வீசாவைப் புதுப்பிக்கவோ, நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கவோ முடியும்,
    • இரண்டு வருடங்கள் என்றிருந்த நிரந்தர வதிவிடத்திற்கான தகுதிக் காலம் மூன்று வருடங்கள் என நீட்டிக்கப்படும்,
    • ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டவில்லை என்பதை நிரூபிப்பதற்காக, தொழிலதிபர்கள் தீவிரமான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்,
    • ஆஸ்திரேலிய தொழிலாளர்களுத் தேவையான பயிற்சி வழங்கவேண்டுமென தொழில் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படும்,
    • குடிவரவுத்துறை வரிக் கோப்பு எண்களை சேகரித்து, ஆஸ்திரேலிய வரி துறை சேர்த்துள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்,
    • விண்ணப்பதாரர் முன்னர் எந்தக் குற்றமும் செயாதவர் என்ற சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும்.
    • நிரந்தர திறன் அடிப்படையிலான (Permanent Skilled Visas) வீசா பெறுவதற்குத் தேவையான விடயங்கள் அதிக கட்டுப்பாடிற்குள்ளாக்கப்படும்:
      • வீசா விண்ணப்பதாரர்களுக்கு அதிக ஆங்கில மொழி அறிவு தேவைப்படும்,
      • வீசா விண்ணப்பதாரர்கள் குறைந்தது மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
      • வீசா விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நேரத்தில் 45 வயதிற்குக் குறைந்தவராக இருக்க வேண்டும்
      • வேலைக்கமர்த்தும் நிறுவனங்கள், ஆஸ்திரேலிய தொழிலாளர்களுத் தேவையான பயிற்சி வழங்குவதை ஊக்குவித்து அதிக கட்டுப்பாடுகள்,
      • ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவரைப் பணிக்கமர்த்த முடியாது.
      • ப் படியாக  கிறார்களா பங்களிக்க க்கான ஓ தேவை பலப்படுத்தியது, மற்றும்
      • ஆஸ்திரேலியாவின் பிராந்தியங்கள் அல்லது தொலைதூரத்தில் வேலைக்கமர்த்துவோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடரும்:
        • ஆஸ்திரேலியாவின் பிராந்தியங்கள் அல்லது தொலைதூரத்திலுள்ள தொழில்துறைகளுக்குத் தேவையான திறமைகளைப் பிரதிபலித்து, தற்காலிக மற்றும் நிரந்தர தொழில்சார் வீசாக்கள் வழங்கப்படும்,
        • தற்போது வழங்கப்படும் சில விதிவிலக்குகள் தொடரும் - ஆஸ்திரேலியாவின் பிராந்தியங்கள் அல்லது தொலைதூரத்தில் வேலைக்கமர்த்த ஒருவருக்கு வீசா வேண்டி விண்ணப்பிக்கும் போது, அதற்கான கட்டணம் செலுத்தத் தேவையில்லை; சில குறிப்பிட்ட வேலைகளுக்கு வயது நிபந்தனை தளார்த்தப்பட்டௌள்ளது.
        • திறமை அடிப்படையில் வீசா பெறுவதற்கான தொழில்கள், குறிப்பாக 457 வீசா பெறுவதற்கான தொழில்களின் பட்டியல் 2017 ஏப்ரல் 19ம் நாளுடன் மாறுகிறது.

 

இந்த மாற்றங்கள் உடனடியாக செயற்படுத்தப்பட ஆரம்பித்து 2018 மார்ச் மாதம் வரை செயலிலிருக்கும். 


 

The most common 457 visa jobs in different areas of Australia

(Categories with fewer than 5 people aren't shown for privacy reasons)

  • Cafe and Restaurant Managers
  • Cooks
  • General Practitioners and Resident Medical Officers
  • Livestock Farmers
  • Meat Worker
  • Motor Mechanics
  • Registered Nurses
  • Sports Coaches, Instructors and Officials
  • Structural Steel and Welding Trades Workers
  • University Lecturers and Tutors
  • Others

இணைப்பு

457 வீசா பெறுவதற்கான தொழில்கள் என வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என முன்மொழியப்பட்ட தொழில்களின் பட்டியல்:

தொழில் OccupationANZSCO Code
Defence Force Senior Officer111212
Turf Grower121218
Deer Farmer121314
Goat Farmer121315
Public Relations Manager131114
Policy and Planning Manager132411
Research and Development Manager132511
Project Builder133112
Importer or Exporter133311
Wholesaler133312
Production Manager (Manufacturing}133512
Production Manager {Mining)133513
Procurement Manager133612
Medical Administrator (Aus)/ Medical Superintendent {NZ)134211
Regional Education Manager134412
Commissioned Defence Force Officer139111
Commissioned Fire Officer139112
Commissioned Police Officer139113
Senior Non-commissioned Defence Force Member139211
Sports Administrator139915
Caravan Park and Camping Ground Manager141211
Licensed Club Manager141411
Bed and Breakfast Operator141911
Retirement Village Manager141912
Antique Dealer142112
Betting agency Manager142113
Travel Agency Manager ,.142116
Amusement Centre Manager149111
Call or Contact Centre Manager149211
Railway Station Manager149412
Boarding Kennel or Cattery Operator149911
Cinema or Theatre Manager149912
Financial Institution Branch Manager149914
Actor211111
Entertainer or Variety Artist211113
Actors, Dancers and Other Entertainers nee211199
Composer211211
Music Director211212
Singer211214
Music Professionals nee211299
Painter (Visual Arts)211411
Potter or ceramic artist211412
Sculptor211413
Artistic Director212111
Media Producer (excluding Video)212112
Radio Presenter212113
Television Presenter212114
Author212211
Art Director {Film, Television or Stage)212311
Director of Photography212313
Film, Television , Radio and Stage Directors212399
Radio Journalist212414
Corporate Treasurer221212
Futures Trader222212
Human Resource Adviser223111
Workplace Relations Advisor223113
Training and Development Professional223311
Archivist224211
Intelligence Officer224411
Policy Analyst224412
Electorate Officer224911
Liaison Officer224912
Migration Agent (Aus)224913
Market Research Analyst225112
Sales Representative (Industrial Products)225411
Sales Representative (Medical and Pharmaceuti cal Products)225412
Aeroplane Pilot231111
Air Traffic Controller231112
Flying Instructor231113
Helicopter Pilot231114
Air Transport Professionals nee231199
Mast er Fisher231211
Ship's Engineer231212
Ship's Master231213
Ship's Officer231214
Marine Surveyor231215
Marine Transport Professionals231299
Multimedia Designer232413
Chemical Engineer233111
Mat erials Engineer233112
Electronics Engineer233411
Industrial Engineer233511
Production or Plant Engineer233513
Petrol eum Engineer233612
Food Technologist234212
Conservation Officer234311
Park Ranger234314
Geophysicist234412
Hydrogeologist234413
Life Scientist (General)234511
Biochemist234513
Biotechnologist234514
Microbiologist234517
Life Scientists nee234599
Metallurgist234912
Exercise Physiologist234915
Natural and Physical Science Professionals nee234999
Vocational Education Teacher (Trades)242211
Vocational Education Teacher (Non-Trades)242211
Education Reviewer249112
Drama Teacher (Private Tuition)249213
Environmental Health Officer251311
Homoeopath252212
Nurse Researcher254212
Web Developer261212
JCT Support and Test Engineers nee263299
Judge271211
Magistrate271212
Tribunal Member -271213
Intellectual Property Lawyer271214
Historian .272411
Translator272413
Archaeologist272414
Community Arts Worker272611
Operating Theatre Technician311214
Pathology Collector (Aus)/ Phlebotomist (NZ)311216
Fisheries Officer311311
Quarantine Officer311313
School Laboratory Technician " ~311414
Hydrographer311415
Construction Estimator312114
Plumbing Inspector312115
Surveying or Spatial Science Technician312116
Civil Engineering Technician312212
Electronic Engineering Draft sperson312411
Electronic Engineering Technician312412
Mechanical Engineering Draftsp erson312511
Safety Inspector312611
Maintenance Planner312911
Building and Engineering Technici ans nee312999
ICT Support Technicians nee313199
Telecommunications Network Planner313213
Blacksmith322111
Electroplater322112
Metal Casting Trades Worker322114
Metal Polisher322115
Pressure Welder322312
Aircraft Maintenance Engineer (Avionics)323111
Engraver323311
Gunsmith323312
Saw Maker and Repairer323315
Engineering Patternmaker323411
Vehicle Painter324311
Stonemason331112
Floor Finisher332111
Electrical Linesworker (Aus)/ Electrical Line Mechani c (NZ)342211
Communications Operator342312
Telecommunications Cable Jointer342412
Telecommunications Technician342414
Butcher or Smallgoods Maker351211
Horse Trainer -361112
Zookeeper361114
Kennel Hand361115
Shearer361211
Nurseryperson362411
Screen Printer392112
Graphic Pre-press Trades Worker392211
Small Offset Printer392312
Canvas Goods Fabricator393111
Leather Goods Mak er393112
Sail Maker393113
Shoemaker393114
Apparel Cutter393211
Clothing Patternmaker393212
Dressmaker or Tailor393213
Clothing Trades Workers nee393299
Wood Turner394214
Gas or Petroleum Opera~to-r399212
Gallery or Museum Technician399311
Broadcast Transmitter Operator399511
Light Technician399513
Musical Instrument Maker or Repairer399515
Television Equipment Operator399517
Diver399911
Interior Decorator399912
Optical Dispenser (Aus)/ Dispensing Optician (NZ)399913
Optical Mechanic399914
Plastics Technician399916
Wool Classer399917
Fire Protection Equipment Technician399918
Technicians and Trades Workers nee399999
Dental Hygienist411211
Dental Prosthetist411212
Dental Therapist411214
Mothercraft Nurse411412
Aboriginal and Torres Strait Islander Health Worker411511
Parole or Probation Officer411714
Defence Force Member – Other Ranks441111
Emergency Service Worker441211
Fire Fighter441212
Detective441311
Police Officer441312
Prison Officer442111
Driving Instructor451211
Funeral Director451311
Funeral Workers nee451399
Flight Attendant .451711
Travel Attendants nee451799
First Aid Trainer451815
Dog or Horse Racing Official452318
Sports Umpire452322
Other Sports Official452323
Golfer452412
Jockey452413
Conveyancer599111
Legal Executive599112
Court Bailiff or Sheriff (Aus)/ Court Collections Officer (NZ)599212
Insurance Investigator599611
Insurance Risk Surveyor599613
Clinical Coder599915
Auctioneer611111
Stock and Station Agent611112
Business Broker612111
Retail Buyer639211
Wool Buyer639212
Driller712211

8 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now