SKIP TO MAIN CONTENT

Whatsapp செயலியிலும் அடுத்தவருடம் முதல் விளம்பரங்கள்!

AAP
Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

அடுத்த வருடம் முதல் பிரபல தொடர்பாடல் செயலியான வட்ஸ் அப்பில் விளம்பரங்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக வட்ஸ் - அப் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்கள் தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய செயலிகளில் தோன்றுவதைப்போல வட்ஸ் - அப்பிலும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனத்தினால் வட்ஸ் அப் செயலி கொள்முதல் செய்துகொள்ளப்படும்போது, வட்ஸ் அப்பில் விளம்பரங்கள் சேர்த்துக்கொள்ளப்படாது என்று முன்னர் தெரிவித்த உறுதிமொழியை மீறி வட்ஸ் - அப் தற்போது விளம்பரங்களின் வழி செல்வதாக செயலி தொழில்நுட்ப நிபுணர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வட்ஸ் - அப் செயலியின் தொடர்பாடல் திரையில் நிலைத்தகவல்களுக்கு இடையில் தோன்றவுள்ள இந்த விளம்பரங்கள் ஏனைய செயலிகள்போல 24 மணி நேரத்துக்கு பார்வைக்காக சேர்க்கப்பட்டிருக்கும் என்றும் அதன் பின்னர் வேறு விளம்பரங்கள் அந்த இடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now