SKIP TO MAIN CONTENT

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Daylight saving நேரமாற்றம்!

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது.

Daylight saving
Source: Getty / Getty Images

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2மணிக்கு உங்கள் கடிகாரங்களை ஒரு மணிநேரம் கூடுதலாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். பெரும்பாலான smart devices தானாகவே நேரமாற்றத்தை பிரதிபலிக்கும்.

வழக்கமான நேரத்தைவிட ஒருமணிநேரம் அதிகரிக்கப்படுவதால் ஞாயிறன்று முக்கிய வேலை இருப்பவர்கள் இந்நேரமாற்றத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்றபடி திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நேரமாற்றம் 2023 ஏப்ரல் 2ம் திகதி முடிவுக்கு வரவுள்ளது.

Northern Territory மற்றும் குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை.

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now