SKIP TO MAIN CONTENT

உங்களது வருமானவரியைத் தாக்கல் செய்துவிட்டீர்களா? காலக்கெடு நெருங்குகிறது!

Tax return
Source: Flickr

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

நீங்கள் சுயமாக myTax இணையத்தளம் வாயிலாக tax return-வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள் என்றால் அக்டோபர் 31ம் திகதிக்கு முன்னதாக இதனை செய்ய வேண்டும்.

அல்லது பதிவு செய்யப்பட்ட வருமான வரி முகவர் ஒருவரினூடாக முதல் தடவையாக வருமானவரியைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றாலோ அல்லது புதிய வரி முகவரைப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றாலோ அவர்களை அக்டோபர் 31ம் திகதிக்கு முன்னதாக தொடர்புகொள்ளுங்கள்.

உரிய காலக்கெடுவுக்கு முன்னர் இதை செய்யத்தவறுபவர்கள் கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்.

வரித்தாக்கலை எவ்வளவு காலதாமதமாக செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் $222 அபராதம் விதிக்கப்படலாம்.

உங்களது வருமான வரி விண்ணப்பத்தின் நிலை தொடர்பில் myGov கணக்கிற்கு login செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் வரி விண்ணப்பங்கள் பரசீலிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்கள் வரை எடுக்கும்.

உங்களுடைய myGov கணக்கு வரித்திணைக்களத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் வரிவிதிப்பு அறிவித்தல் உங்கள் inbox-க்கு அனுப்பப்படும். இது குறித்த மின்னஞ்சல் அல்லது குறுந்தகவலும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்களது வருமான வரி விண்ணப்பத்தில் ஏதாவது தவறு இருந்தாலோ அல்லது எதையாவது குறிப்பிட மறந்தாலோ அல்லது அதிலுள்ள விபரங்களில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றாலோ இதற்கான கோரிக்கையை myGov கணக்கு ஊடாக முன்வைக்கலாம்.

ato.gov.au என்ற இணையத்தளத்தில் பல மொழிகளில் வரி பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

அல்லது மொழிபெயர்த்துரைப்பு சேவையைப் பெற 13 14 50 என்ற எண்ணை அழைக்கலாம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now