SKIP TO MAIN CONTENT

வெள்ளை புள்ளி நோயினால் பாதிக்கப்பட்ட இறாலை உண்ணலாமா?

உண்ணலாம் என்றும் அதனால் மனித உடலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்கிறது ABC செய்தி.

White Spot disease prawn
Source: ABC Australia

1 min read

Published

Updated

By Selvi

Source: ABC Australia



Skip to article content

வெள்ளை புள்ளி தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட இறாலை உண்ணுவது நமக்கு பாதுகாப்பானது தானா என்ற கேள்வி தற்போது உலவி வருகிறது.  ஆமாம் பாதுகாப்பானது தான் இவ்வகையான தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட இறாலினால் மனித உடல் நலனுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என ABC இணையச்செய்தி தெரிவிக்கிறது.

தென் கிழக்கு குயின்ஸ்லாந்தில் வாங்கப்பட்ட 30 சதவீத இறால்களில் வெள்ளை புள்ளி தொற்று நோய் இருந்ததாக ABCயின் Four Corner நிகழ்ச்சி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை புள்ளி தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட இறால்களின் இறப்பினால் இறால் வியாபாரத்துறைக்கு இதுவரை கிட்டத்தட்ட 40 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் இத்தொற்றினால் இறந்த இறாலை தூண்டிலில் பயன்படுத்தி மீன் பிடிப்பதினால், வெள்ளை புள்ளி தொற்று நோய் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மீனவர்கள் இறாலை தூண்டிலில் பாவித்து மீன் பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now