SKIP TO MAIN CONTENT

தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்த ஆண்டு முதலிடம் யாருக்கு?

உலகிலேயே மிக விலையுயர்ந்த உலோகத்தை உற்பத்தி செய்வதில் இது வரை சீனா முதலிடத்தில் இருந்தது. சீனாவை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை வெல்லும் நாடு எது தெரியுமா?

Gold pouring
Molten gold pours from furnace Source: Corbis Documentary RF

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

முதல் முறையாக, தங்கம் மிக அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் தங்கச் சுரங்கங்களில், Red 5 என்ற நிறுவனத்தின் King of the Hill என்ற சுரங்கத்தில் உற்பத்தி அதிகரிக்கப்படுவதால் முதலிடத்தில் ஆஸ்திரேலியா வருகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது சுமார் 80 டொலர்கள் என்று அதிகரித்திருப்பது, சுரங்க வேலைகளை முடுக்கிவிட தம்மை ஊக்குவித்திருக்கிறது என்று அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

Red5's gold mines
Red5's gold mines Source: Red5

சீனாவை எப்படி நாம் வென்றோம்?

கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக, தங்க உற்பத்தியில் சீனா தான் முன்னிலையில் நின்றது.  இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 153 தொன் தங்கத்தை சீனா உற்பத்தி செய்திருந்தது.  நம் நாட்டு உற்பத்தியாளர்கள் 157 தொன் தங்கத்தை உற்பத்தி செய்திருந்தார்கள்.

சீன சுரங்கங்களில் ஏற்பட்ட சில விபத்துகள், உயிரிழப்புகள் அவர்களது உற்பத்தியில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் உற்பத்தி அதிகரிக்கிறது

தங்க உற்பத்தியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகப்படியான தங்கம் உற்பத்தி செய்திருக்கிறார்கள்.  எம் நாட்டு மண்ணிலிருந்து 2019/20 நிதியாண்டில் 328 தொன் தங்கம் தோண்டியெடுக்கப்பட்டது.  ஒரு வருடத்தில் பெறப்பட்ட மிக அதிக தங்கம் இதுவாகும்.

கடந்த நிதியாண்டு, 321 தொன் பெறப்பட்டுள்ளது. தங்க சுரங்க வரலாற்றில் இரண்டாவது சிறந்த ஆண்டாக அது பதிவாகியது.

A stash of 1 million dollars of Gold at the Perth Mint in Western Australia August 9, 2011. (AAP Image/Tony McDonough)
A stash of 1 million dollars of Gold at the Perth Mint in Western Australia August 9, 2011. (AAP Image/Tony McDonough) Source: AAP

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

பொதுவாக மற்றைய அனைத்துப் பொருட்களின் விலைகளும் குறைந்து கொண்டு சென்றாலும், தங்கத்தின் விலை மட்டும் கூடிக் கொண்டே போவது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்.

உழைப்பை சொத்தாக மாற்றுவதற்கு தங்கம் ஒரு சிறந்த வழி

பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக கலாச்சார வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் தமது உழைப்பை சொத்தாக மாற்றுவதற்கு தங்கம் ஒரு சிறந்த வழி என்ற மனப்பான்மையில் இருப்பது ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Covid பெருந்தொற்று ஆரம்பமாகிய நாட்களில் தங்கத்தின் விலை சரிந்தது.  இருப்பினும் அந்த விலை சரிவு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

அது தவிர, bitcoin போன்ற digital நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், தங்கத்தின் தேவை குறையும் என்றும் அதனால் விலை குறையும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறியிருந்தார்கள்.  அதுவும் பொய்த்துப் போனது.

அமெரிக்க டொலர் பலவீனமாகப் போயிருப்பது இன்னொரு காரணமாகக் கூறப்படுகிறது.

எமது Reserve Bank of Australia, தங்கத்தை விட பணப்பத்திரங்களை (Bonds) வாங்குவதைக் குறைத்து வருகிறது.  ஆனால், அமெரிக்காவில் US Federal Reserve அதில் மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை.  அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது தங்கத்தின் விலை குறைவதும், அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும் போது தங்கத்தின் விலை அதிகரிப்பதும் அண்மை நாட்களில் நம்பகமான ஒரு வழிகாட்டியாக மாறியிருக்கிறது.

தங்கத்தின் விலை உயரப் போகிறது

எனவே தங்கத்தின் விலை உயரப் போகிறது.  அத்துடன், தங்கம் நமது பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பும் மீண்டும் உயரும் என்று நம்பப்படுகிறது.

Price of Gold
Price of Gold Source: SBS Tamil

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now