உலகளாவிய ரீதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

COVID19 DAILY LIFE

Mask wearing is recommended with the rise of COVID cases in Australia. Source: AAP / DIEGO FEDELE/AAPIMAGE

ஆஸ்திரேலியாவில் BA4 மற்றும் BA5 ஆகிய துணை திரிபுகள் பரவலாக அதிகரித்துவருகின்றன. அதே நேரத்தில் புதிய திரிபுகளான XBB மற்றும் BQ.1. ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.

நியூ சவுத் வேல்ஸில், இந்த வாரம் 22,672 பேருக்கு கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 52.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் 39 உயிர்கள் பலியாகியுள்ளன.

விக்டோரியாவில், 16,636 பேருக்கு புதிதாக கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது. இது முந்தைய அறிக்கையிடல் காலத்தை விட 63 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தில் 46 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

குயின்ஸ்லாந்தில், புதிய கோவிட் -19 தொற்றுகள் கடந்த அறிக்கையிடல் காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன, இது 5828 இலிருந்து 10,106 நபர்களாக அதிகரித்துள்ளது.
NSW Health மற்ற மாநிலங்களைப் போலவே, பொதுப் போக்குவரத்திலும், பொது இடங்களிலும்(சமூக இடைவெளி கடினமாக இருக்கும் போது) முகக்கவசங்களை பரிந்துரைக்கிறது.

கோவிட் தடுப்பூசி குறித்த இந்த வார அறிவிப்புகள்

சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு திணைக்களம் இந்த வாரம் கோவிட் தடுப்பூசி தொடர்பாக மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
  1. Pfizer இன் Omicron-specific கோவிட் பூஸ்டர், ஆஸ்திரேலியாவில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 12 ஆம் தேதி முதல் கிடைக்கும்.
  2. குழந்தைகளுக்கான Pfizer கோவிட்-19 தடுப்பூசி, 6 மாதங்கள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், இயலாமை, கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு, சிக்கலான அல்லது குறிப்பிடத்தக்க சுகாதாரத் தேவைகளுடன் உள்ளவர்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 2023 நடுப்பகுதியில் இருந்து கிடைக்கும்.
  3. இந்த கட்டத்தில் ஐந்தாவது சுற்று தடுப்பூசி அல்லது மூன்றாவது பூஸ்டரை பரிந்துரைக்க வேண்டாம் என ATAGI முடிவு செய்துள்ளது. குளிர்காலத்திற்கு முன்னதாக 2023 இன் தொடக்கத்தில் புதிய பரிந்துரை எதிர்பார்க்கப்படுகிறது.
    எவ்வாறாயினும், பூஸ்டர் போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ATAGI-இன் கூற்றுப்படி, மூன்றாவது பூஸ்டரைப்பெறத் தகுதியான 5.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் அதனைப் பெறவில்லை. இதேபோல், 50 வயதுக்கு மேற்பட்ட 3.2 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் இன்னும் தமக்குரிய நான்காவது பூஸ்டரைப் பெறவில்லை.
    ஆஸ்திரேலியர்கள் antivirals-க்கான தமது தகுதியை கண்டறியுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

    "அந்த சிகிச்சைகளை முடிந்தவரை விரைவாகப் பெறுவது நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது" என்று தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly கூறினார்.

    கோவிட் தொற்று கண்டறியப்பட்ட ஒரு நாளுக்குள் அதை எடுத்துக் கொண்டால் சிறந்தது எனவும், ஆனால் ஐந்து நாட்கள் வரை அதை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
    WHOஇன் வாராந்திர அறிக்கையிடலின்படி, ஜூலை நடுப்பகுதியில் இருந்து, உலகளாவிய கோவிட் தொற்றுகள் முதல் முறையாக அதிகரித்துள்ளன. இந்த வாரம் 2 சதவீதம் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உலகளவில் சோதனைகள் குறைந்து வருவதால், உண்மையான எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்று WHO எச்சரிக்கிறது.

    புதிய வாராந்திர இறப்புகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 30% குறைந்துள்ளது.

    ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகியவை அதிக உலகளாவிய கோவிட் தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன.

    Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
    கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
    Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்

    உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

    உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

    SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  
    பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
    செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

    Share

    Published

    Updated

    By Yumi Oba
    Source: SBS

    Share this with family and friends


    Follow SBS Tamil

    Download our apps
    SBS Audio
    SBS On Demand

    Listen to our podcasts
    Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
    Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
    Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

    Watch on SBS
    Tamil News

    Tamil News

    Watch in onDemand