SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் 7 இந்தியப்பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை! விசாரணையில் பொலீஸார்!

Monica*
Monica* contemplated suicide after moving to Australia from India. Source: Supplied

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்ன் வடபகுதியில் அமைந்துள்ள Whittlesea கவுன்ஸில் பிரதேசத்தில் குறிப்பிட்ட மாத இடைவெளிகளில் சுமார் ஏழு இந்தியப்பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தொடர்பாக பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

2018 ஆம் ஆண்டு ஐந்து பெண்களும் 2019 இரண்டு பெண்களும் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாத இடைவெளிகளில் Whittlesea பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை சம்பவங்களில், உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியப்பெண்கள், தாய்மார்கள். அத்துடன் அவர்கள் அனைவரும் கையாண்டிருந்த  தற்கொலை முறைகள் மனத்தொந்தரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களில் சிலர் ஏதோ ஒரு வகையில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whittlesea கவுன்ஸிலின் சட்ட ஆலோசகர் ஒருவர் முதன்முதலாக இந்த விடயத்தினை மரண விசாரணை அதிகாரிகளிடம் எடுத்துச்சென்றதையடுத்து, பொலீஸாரும் இந்தத்தொடர் மரணங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளனர்.

Whittlesea கவுன்ஸில் பிரதேசத்திற்குள் அடங்கும் Epping, Mill Park பகுதிகளில் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மெல்பேர்னிலேயே இரண்டாவது அதிகூடுதலாக குடும்ப வன்முறைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன என்று பொலீஸ் தகவல்கள் கூறுகின்றன.

If you or someone you know is impacted by sexual assault, family or domestic violence, call 1800RESPECT on 1800 737 732 or visit 1800RESPECT.org.au. In an emergency, call 000. 

Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at BeyondBlue.org.au and lifeline.org.au.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now