Magpie என்ற பறவை தாக்கியதன் காரணமாக ஐந்து மாத சிசு ஒன்று பிரிஸ்பனில் அண்மையில் இறந்தது தொடர்பான செய்தி மிக பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில் இந்த சிசுவின் தாயாரே magpie யால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலை அவர் சமாளிக்க முற்படும் போது அவர் சிசுவின் மீது விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் சிசு தூரதிர்ஷ்டவசமாக இறக்க நேர்ந்தது.

Spring என்ற வசந்த காலத்திலேதான் magpies களின் breeding season என்ற இனவிருத்தி காலம் ஆரம்பமாகிறது. நாம் இப்போது வசந்தகாலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் இந்த பறவைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். தன் பாதையில் குறுக்கிடும் அல்லது தனது territory என்ற அவை வசிக்கும் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையும் பரிச்சயமற்றவர்களை அது தாக்குவதாக அல்லது கொத்தி விரட்டுவதாக பறவைகள் தொடர்பான ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். Magpie பறவைகள் மனிதருடைய முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அபாரமான ஆற்றல் உள்ளவை என்றும் வழமையாக தமது territory க்குள் நுழைபவர்களை அது அடையாளம் கண்டு கொள்ளும் என்பதால் அவர்களை அது தாக்குவதில்லை என்றும் புதிதாக தமது பகுதிகளுக்குள் நுழைபவர்களையே அது தாக்குகிறது என்றும் Griffith பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த magpie expert பேராசிரியர் Darryl Jones சொல்கிறார்.
ஆனால் இன்றைய covid 19 சூழலில், பெரும்பாலானோர் mask என்ற முக்க க்கவசங்களை அணிந்திருப்பதால் தமக்குப் பரிச்சயமானவர்களை இவற்றால் அடையாளங்காண முடிவதில்லை என்பது தற்போது உருவாகியிருக்கும் புதிய பிரச்சனையாகும்.

எல்லா magpie களும் மனிதர்களைத்தாக்குகின்றனவா?
சுமார் 90 சதவீதமான magpie க்கள் மனிதர்களைத்தாக்குவதில்லை என்று பேராசிரியர் Darryl Jones சொல்கிறார். இனவிருத்திக்காக மரங்களில் கூடுகளை அவை அமைத்துக்கொள்ளும்போது territory என்ற தமது பகுதிகளை மற்றும் கூடுகளைப் பாதுகாத்துக்கொள்ள விழையும் சில ஆண் magpies கள் மட்டுமே பெரும்பாலும் மனிதர்களைத் தாக்குவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்த magpies களின் சொண்டு காகங்களுக்கு போல நீளமானவையாகவும் தீட்சண்யமாகவும் இருப்பதால் அவை பெரும்பாலும் மனிதர்களின் தலைப்பகுதியில் கடுமையான காயங்களை உண்டாக்க வல்லவை. அத்தோடு கூர்மையான கால் நகங்களும் காயங்களை ஏற்படுத்த வல்லவை.
Magpies கள் பெரும்பாலும் பின்புறமாக பறந்துவந்து தலை, காது மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளையே தாக்குவதாகவும் முன்புறமாகப் பறந்து வந்து கண், மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகளைத் தாக்குவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Magpie என்ற பறவைகள் சிறு பகுதிகளையே தங்கள் territory களாக வகுத்துக்கொண்டு அந்தப் பகுதிகளிலேயே வசிப்பதாகவும் தூர இடங்களுக்கு அவை பெரும்பாலும் செல்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த magpie தாக்குதலில் எருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர்கள் பல ஆலோசனைகளை வழங்குகிறார்கள். நமது முகத்தை அவை அடையாளம் வைத்துக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெரும் பலன் தரும் என்று கூறப்படுகிறது.
- வீட்டுக்கருகாமையில் magpies கள் நடமாடும் பட்சத்தில் அவை உங்களை, வீட்டின் முற்றப்பகுதியிலோ அல்லது backyard என்ற வீட்டின் பின்பகுதியிலோ தாக்க க்கூடிய சந்தர்ப்பம் உண்டு என்றும் இதைத்தவிர்க்க, அவற்றுக்கு சில உணவுப் பொருட்களை கொடுப்பதன் மூலமாக உங்கள் முகத்தை அவற்றுக்கு பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் Cheese, mince meat மற்றும் ham போன்ற உணவுப்பொருட்களை அவை விரும்பி உண்ணும் என்றும் சொல்லப்படுகிறது.
- Walking என்ற நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது, குறிப்பாக வசந்த காலங்களில் செல்லும்போது வழமையான ஒரே பாதையில் தினமும் செல்வது நல்லது என்றும் அப்பகுதியிலுள்ள magpies கள் உங்கள் முகத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இதனால் ஏற்படும் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
- Magpie ஒன்றால் ஒருவர் தாக்கப்பட்டால் அப்பகுதிக்கு மீண்டும் அவர் செல்லாதிருப்பது நல்லது என்றும் முதன்முறை தாக்கப்பட்டவர்கள் அதே பகுதியில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
- Magpie கள், முகத்திற்கு நேரே பறந்துவந்து எப்போதுமே தாக்குவதில்லை என்பதால் தாக்கப்படும்போது அவற்றை நேரடியாகப் பாரத்துக்கொண்டு பின் வாங்குவது நல்லது என்று சொல்லப்படுகிறது. இருந்தபோதும் கண்களைப் பாதுகாத்துக்கொள்ள கண்ணாடி அணிவது சிபாரிசு செய்யப்படுகிறது.
- நடந்து செல்பவர்கள் தமது காது மற்றும் கழுத்துப் பகுதிகளைப் பொருத்தமான முறையில் மறைத்துக்கொள்வதும் நல்லது.
- Park குகள் மற்றும் cycle track களில் cycle இல் செல்பவர்கள் காதை மறைத்த தலைக்கவசத்தை அணிந்துகொள்வது நல்லது. சிலர் தமது தலைக்கவசங்களில் முட்கள் போன்ற நீண்ட கம்பிகளை ப் பொருத்தியிருப்பதை பலர் அவதானித்திருக்க க்கூடும். இந்த நபர்களை magpies கள் பொதுவாகத்தாக்குவதில்லை என்றும் கருதப்படுகிறது. Cycle இல் செல்பவர்கள் பெரும்பாலும் தாக்கப்படுவதால் இவர்கள் மிகச் சொற்ப செலவில் காப்புறுதி எடுத்துக்கொள்வது நல்லது என்றும் சொல்லப்படுகிறது. Magpie தாக்குதல்காரணமாக cycle இல் செல்பவர்கள் பெரும் விபத்துக்களைச் சந்திப்பதாகவும் தரவுகள் சொல்கின்றன.
- நடந்து செல்லும்போது magpie நடமாட்டம் பற்றிய அவதானத்துடன் செல்வது.
போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் குறிப்பாக எந்தெந்த பிரதேசங்களில் magpie தாக்குதல் அதிகமாக இடம்பெற்றுள்ளன?
ஆஸ்திரேலியாவில் குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்குப்பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் நமக்கு மட்டுமல்லாமல் magpie களுக்கும் தலைநகரம் Canberra தான் என்று சொல்லப்படுகிறது. அங்குதான் மிக அதிகமான magpie தாக்குதல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அங்கு ஏராளமான magpies கள் வசிக்கின்றன. Tasmania போன்ற மாநிலங்களில் இதுவரை magpie தாக்குதல் இடம்பெறவில்லை என்றே சொல்லப்படுகிறது.

நம்மூர் காகங்கள் போலவே இருக்கும் இந்த magpie க்கும் காகங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
Magpies களும் காகங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. Magpies காகங்களை விடச் சற்று பெரியவை. ஆனால் எடையைப் பொருத்தவரை எடை சற்று குறைந்தவை. Magpie கள் காகத்தை விட நுண்ணறிவு அதிகமுள்ளவை என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். காகங்கள் கறுப்பு நிறத்தவை ஆனால் சில magpie களின் உடலில் வெள்ளை patch களைப் பார்க்க முடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
