யாருக்கு என்றால் - IOS 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்பில் இயங்கும் iphone, 2.3.7 அல்லது அதற்கு முந்தைய Android Phone வைத்திருப்பவர்களின் கைபேசிகளில் வேலை செய்யாமல் போகக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏனென்றால் மேற்கூறிய காலாவதியான மென்பொருளில் இயங்கும் கைபேசிகளுக்கான தொழில்நுட்ப உதவியை பிப்ரவரி முதலாம் தேதி முதல் நிறுத்திக் கொள்ள போவதாக கடந்த ஆண்டு இறுதியில் WhatsApp உரிமையாளரான Facebook நிறுவனம் அறிவித்துள்ளது.
Windows 10 mobile OSற்கான தொழில்நுட்ப உதவியை Microsoft நிறுத்தி கொள்ளப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து WhatsApp அனைத்து Windows கைபேசிகளுக்கான தொழில்நுட்ப உதவியை கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. தற்போது பிப்ரவரி முதலாம் தேதி முதல் காலாவதியான மென்பொருளில் இயங்கும் iphone, Android கைபேசிகளுக்கான தொழில்நுட்ப உதவியை WhatsApp நிறுத்தி கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
