வரி செலுத்துவோர்
லேபர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியர்கள் இரண்டு கூடுதல் வரி குறைப்புகளால் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 1, 2026 முதல் $18,201 முதல் $45,000 வரையிலான வருமானத்திற்கு செலுத்தப்படும் வரி விகிதம் 16 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படும்.
ஜூலை 1, 2027 முதல் இந்த விகிதம் 14 சதவீதமாகக் குறைக்கப்படும்.
$45,000 க்கு மேல் சம்பாதிக்கும் எவரும் ஜூலை 2026 முதல் $268 ஐயும் அதற்கு அடுத்த ஆண்டு $536 ஐயும் சேமிப்பார்கள்.
தேர்தலுக்கு முந்தைய முக்கிய வாக்குறுதியான இதனை நிறைவேற்ற அரசுக்கு $17.1 பில்லியன் செலவாகும்.
முதல் வீடு வாங்குபவர்கள்
முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு அரசு வழங்கும் Help to Buy திட்டத்தின் வருமான மற்றும் சொத்து விலை வரம்பு உயர்த்தப்படுகிறது. இதற்காக நிதிநிலை அறிக்கையில் $800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஊடாக 40,000 தகுதியுள்ள முதல்முறை வீடு வாங்குபவர்கள் தங்கள் புதிய வீட்டிற்கு 40 சதவீதவரையிலான அரச பங்களிப்பை பெறலாம். 2 சதவீதம் வரையிலான deposit-வைப்புத்தொகை போதுமானது.
வருமான வரம்பு தனிநபர்களுக்கு $90,000 இலிருந்து $100,000 ஆகவும், தம்பதிகள் அல்லது ஒற்றைப் பெற்றோருக்கு $120,000 இலிருந்து $160,000 ஆகவும் மாறும்.

First-home buyers will get more support under the 2025 federal budget. Source: SBS
பெண்கள்
Endometriosis, pelvic pain, perimenopause மற்றும் menopause தொடர்பான பிரச்சனைகள் உள்ள பெண்கள் 33 சிறப்பு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெறலாம்.
பெண்களின் ஆரோக்கியத்திற்காக ஏற்கனவே 2024-ல் உறுதி செய்யப்பட்ட $573 மில்லியனுடன் கூடுதலாக $240 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரைகள், Ryeqo(endometriosis மருந்து) மற்றும் Pergoveris(IVF மருந்து) ஆகியவை Pharmaceuticals Benefits Scheme-ல் சேர்க்கப்படும்.
PBS
Pharmaceuticals Benefits Scheme(PBS)-இல் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை மேலும் குறைக்கும்வகையில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு $785 மில்லியன் நிதி செலவிடப்படவுள்ளது. அதன் பின்னர் ஆண்டுக்கு $236.4 மில்லியன் செலவிடப்படும். இதன்படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு மருந்துச்சீட்டிற்கான விலை $31.60 இலிருந்து $25 ஆக குறையும்.
Concession அட்டை கொண்டவர்களுக்கு மருந்து கட்டணம் 47.70 ஆக மாறாத நிலையில் இருக்கும்.
கூடுதலாக, pharmaceutical wholesalers ஒப்பந்தத்தின் கீழ் மருந்துகளின் விநியோகத்தை அதிகரிக்கவென அரசு ஐந்து ஆண்டுகளில் அரை பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிடும்.
குடும்பங்கள்
லேபர் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்து ஆஸ்திரேலிய வீடுகளும் வணிகங்களும் கூடுதலாக $150 மின் கட்டண மானியத்தைப் பெறும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை $75 என, இரண்டு தவணைகளில் இம்மானியம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு $3.5 பில்லியன் செலவில் வழங்கப்பட்ட மின்கட்டண மானியத்திற்கு மேலதிகமாக இது வழங்கப்படவுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட தொழிலாளர்கள்
$175,000-க்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு, non-compete clauses குறித்த தடை நீக்கப்படும்.
இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு தொழிலாளர், ஒரே துறையில் வேறு நிறுவனத்தில் வேலை செய்யலாம் அல்லது தானாகவே சிறுதொழிலை ஆரம்பிக்கலாம்.
குழந்தை பராமரிப்பு, கட்டுமானம் மற்றும் சிகை அலங்காரம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் non-compete clauses தடையினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
முதியோர் பராமரிப்புப் பணியாளர்கள்
முதியோர் பராமரிப்புப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வுக்காக கூடுதலாக $88.3 மில்லியன் செலவிடப்படும். Fair Work ஆணையம் இந்தத் துறைக்கான குறைந்தபட்ச awardகளை அதிகரிக்க முடிவு செய்ததைத் தொடரந்து இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
சுகாதாரத்துறை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி Medicare ஊடான சேவைகளை மேம்படுத்தவென கூடுதலாக $8.5 பில்லியன் செலவிடப்படுமென அரசு அறிவித்துள்ளது.
GP-குடும்ப மருத்துவருடனான சந்திப்புக்களில் பத்தில் ஒன்பதை bulk billing ஆக்கும் வகையில், குடும்ப மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை மூன்று மடங்காக அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
Medicareக்கான இந்த கூடுதல் நிதி இந்த ஆண்டு நவம்பர் முதல் வழங்கப்படும்.
அதேநேரம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கூடுதலாக 50 அவசர சிகிச்சை மையங்களை கட்ட $644 மில்லியன் செலவிடப்படும்.
பீர் குடிப்பவர்கள்
பீர் குடிப்பவர்களுக்கு ஒரு வெற்றியாக, லேபர் அரசு ஆகஸ்ட் 2025 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு draught beer excise-ஐ நிறுத்திவைப்பதற்கு உறுதியளித்துள்ளது.

Beer drinkers are a winner in the 2025 federal budget. Source: Getty / Bec Hannaford
பல் கலாச்சாரம்
சமூக ஒற்றுமையை அதிகரிக்கும் நோக்கில், யூத வழிபாட்டுத்தலங்கள் உட்பட மத மற்றும், சமூக மைய மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அரசு $178 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
குழந்தை பராமரிப்பு
$533,000 க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் அனைத்து குடும்பங்களும் மூன்று நாட்கள் மானிய விலையில் குழந்தை பராமரிப்பு வசதியை பெறலாம். இது ஜனவரி 2026 இல் தொடங்கும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.