SKIP TO MAIN CONTENT

வயர்தொடர்பு இல்லாமல் போன் எப்படி சார்ஜ் ஆகிறது?

flickr
Source: Flickr

5 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

Wired chargers என்ற வயர்மூலமாக மின் இணைப்பை ஏற்படுத்தி உபகரணங்களை, பிரதானமாக மொபைல் போன் போன்றவற்றைச் charge செய்வதில் புதுமை ஏதும் இல்லை என்றபோதும் இப்போது wireless charging அல்லது cordless charging என்ற முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த wireless charging என்றால் என்ன என்று பார்ப்போம்.

Pxfuel
Source: Pxfuel

மொபைல் போன் மற்றும் tablet கணனி போன்றவற்றைச் சார்ஜ் செய்ய வழமையாக, வயர் அல்லது cable மூலமாக மின்சாரத்தை இணைப்பது நாம் அறிந்த ஒன்று. இதற்கு charging cable தேவை. Wireless என்பது வயர் இல்லாமல் இணைப்பது என்று பொருள்படும். இதற்கென உள்ள mat அல்லது pad என்ற தட்டையான பரப்பின் மீது மொபைல் போனை வைத்தால் phone சார்ஜ் ஆகும். இந்த Mat இன் ஒரு பகுதி மின் வழங்கும் plug இல் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த matஇற்கும் போனுக்குமிடையே வயர் தொடர்பு இருக்காது. இந்த வயர்லஸ் சார்ஜ் முறை இப்போது பரவலாக பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

வயர்தொடர்பு இல்லாமல் மொபைல் போன் எப்படி சார்ஜ் ஆகிறது என்று ஆராய்வோம்.

இந்த தொழில்நுட்பத்திற்கு electromagnetic induction என்று பெயர். Charge pad இல் உள்ள electromagnetic induction coil, energy அதாவது மின் ஆற்றலை மொபைல் போனின் மேற்பரப்பு வழியாக போனுக்குள் செலுத்துகிறது. போனுக்குள் உள்ள receiver coil இந்த ஆற்றலை மின்சக்தியாக மாற்றி பட்டரிக்குள் செலுத்துகிறது. இது நிகழ்வதற்கு charge pad உம் மொபைல் போனும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கவேண்டும். Cordless tooth brush உம் இம்முறையிலேயே charge ஆகிறது.

Flickr
Source: Flickr

எல்லா மொபைல் போன்களையும் உபகரணங்களையும் இப்படி wireless முறையில் charge செய்ய முடியுமா என்ற கேள்வி உங்களுக்குத் பிறக்கலாம். அதற்கு விடை தேடுவோம்.

இல்லை. மொபைல் போன் என்றால் அது wirelessly chargeable ஆக இருக்கவேண்டும். iPhone 8 மற்றும் அதற்குப் பிந்திய iphoneகள், Samsung galaxy 8 இற்குப் பின்வந்த Samsung போன்கள், Huawei p 30, google pixel 3, LG v30, Nokia 9, Sony Experian XZ3 இவற்றைத்தவிர மேலும் பல மொபைல் போன்களை wireless முறையில் charge செய்யலாம். இப்போது அநேகமாக எல்லா புது மாடல் போன்களும் wirelessly chargeable phone களாகவே வருகின்றன. இவற்றைத்தவிர Apple Watch உட்பட பல smart watch களை wireless முறையில் charge செய்ய முடியும். Nexus 7 போன்ற tablet கணனிகளையும் wireless முறையில் சார்ஜ் செய்ய முடியும்.

அதுமட்டுமல்ல இவ்வருட இறுதியில் சந்தைக்கு வரவிருக்கும் iPhone 12 இல் வயரை இணைத்து சார்ஜ் செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளதாகவும், இதை வயர்லஸ் முறையில் மட்டுமே charge செய்யமுடியும் என்றும் Apple வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள செய்தியொன்று சொல்கிறது. இதற்கு முன்னர் வயர்களால் earphone ஐ இணக்கும் முறையையும் Apple நீக்கிவிட்டது என்பது நாம் அறிந்தவொன்று. இதைத்தவிர wireless charging வசதி இல்லாத போன்களுக்கு பிரத்தியேகமான mobile phone case கள் cover உறைகள் இப்போது வந்திருக்கின்றன. இந்த கவர் உள்ள போன்களை wireless முறையில் சார்ஜ் செய்ய முடியும். இதைத்தவிர Toyota உட்பட பல வாகன தயாரிப்பாளர்கள், wireless charging வசதிகளை இப்போது வாகனத்திற்குள் வழங்குகிறார்கள்.

Flickr
Source: Flickr

இந்த வயர்லஸ் charge முறையில் பல நன்மைகள் உள்ளன.

ஒருவீட்டில் உள்ள நான்குபேரிடம் நான்கு வேறுபட்ட phoneகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொன்றும் வித்தியாசமான charging cable களைக் கொண்டிருக்கக் கூடும். செல்லும் இடங்களிலும் இந்த தனித்தனி cable வசதிகள் இருக்குமென்று சொல்லமுடியாது. அதேநேரத்தில் பல வீடுகளில் பல்வேறு வயர்கள் power point களில் தொங்கிக்கொண்டிருப்பதால் மின்சாரம் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அத்தோடு இந்த charging cable கள் சீக்கிரமாக பழுதாவதோடு, உபகரணங்களுக்கும் ஊறு செய்கின்றன. மொபைல் போன்களில் உள்ள charging port கள் மிகவும் fragile பழுதாக க்கூடியவை என்பதால் cable கள் உபகரணங்களை பாதிக்கின்றன. இதைத்தவிர தொடர்ந்து வயரால் இணைக்கப்பட்ட உபகரணங்கள் electrical connectors என்ற முழு மின் விநியோக systemத்துடனும் தொடர்பிலிருப்பதால், அதனால் பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் மின் விநியோகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தாத wireless charging பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதைத்தவிர வயர்லஸ் சார்ஜ pad கள் பெரிய அளவிலும் வருவதால் சமகாலத்தில் ஒரு pad இல் ஒன்றுக்கு மேற்பட்ட உபகரணங்களைச் charge செய்ய முடியும். அத்தோடு போன் போதுமான அளவு சார்ஜ் ஆனநிலையில் wireless charger சார்ஜ் செய்வதை நிறுத்திவிடும். Over charge ஆவதற்கோ அல்லது பாட்டரி அதிகபட்ச மாக சூடாகி விபத்துகள் ஏற்படுவதற்கோ சந்தர்ப்பம் இல்லை.

Flickr
Source: Flickr

பொது இடங்களில் வயர்மூலமாக உபகரணங்களை இணைக்கும்போது, ஒருவரது மொபைல் போன் data’s தரவுகள் பகிரப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாகவே இப்போது wireless charging முறை பிரபலமாகிவருகிறது. Wireless charging இப்போது Qi என்ற ஒரு சர்வதேச தரத்தை universal standard ப் பயன்படுத்துவதால் எல்லா நாட்டினரும் எல்லாவகை உபகரணங்களையும் charge செய்ய ஒரே வயர்லஸ் முறையைப் பயன்படுத்தமுடியும். ஒவ்வொரு நாட்டுக்கும் உகந்த voltage adopter களை நாம் கொண்டு செல்லத்தேவையில்லை.

Wireless charging இல் பிரச்சனைகளும் உள்ளன.

Wireless charging pad களை இடத்துக்கிடம் கொண்டு செல்வது சிரம ம். அவை வயர்களைப்போல எடைகுறைந்தவையல்ல. lap top மூலமாகவும் power bank மூலமாகவும் charge செய்வதை வாடிக்கையாக்க கொண்டிருப்பவர்களுக்கு இது சௌகர்யமானதல்ல. மேலதிக செலவின்றி எல்லா போன்களையும் இதில் charge செய்ய முடியாது. வயர்லஸ் சார்ஜர்கள் சார்ஜ் செய்ய நீண்ட நேரம் எடுக்கும். சாதாரண மொபைல் போன்களை வயர் தொடர்போடு 10W தொடக்கம் 18 W வரை வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். கடைசியாக சந்தைக்கு வந்த iPhone 11 ஐ wireless முறையில் 7.5 W வேகத்தில்தான் சார்ஜ் செய்யமுடியும்.

அத்தோடு மேலதிக செலவின்றி பல முந்தைய மாடல் மொபைல் உபகரணங்களை நேரடியாக wireless முறையில் சார்ஜ் செய்ய முடியாது.வயர்லஸ் மூலமாக சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது போனைப் பயன்படுத்துவது சிரம ம் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

youtube
Source: YouTube

Wireless charge செய்யும்போது போன்கள் மற்றும் உபகரணங்கள் அதிகம் சூடாவதாகவும் கையில் எடுக்கும் போது இந்த சூட்டை உணரமுடிவதாகவும் பலர் கூறுகின்றார்கள். அது உண்மைதான். Induction முறையில் உறிஞ்சப்படும் ஆற்றல் உடனடியாக, பாட்டரிகளுக்குள் செல்வதில்லை என்பதால் இந்த சூடு உணரப்படுகிறது. ஆனால் இது பட்டரியையோ அல்லது போனையோ பாதிக்காது என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Wireless charging battery இன் ஆயுளைக் குறைக்கும் என்ற கவலை உங்களுக்கு உள்ளதா? எல்லா மொபைல் போன் பட்டரிகளும் காலப்போக்கில் திறன் குறைந்துபோவது இயல்பு. ஆனால் wireless charging பட்டரியின் ஆயுளை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. பொதுவாக மொபைல் போன்களை 100 சதவீத சார்ஜ் செய்வதைவிட தினமும் சுமார் 45 தொடக்கம் 80 சதவீதமான சார்ஜில் வைப்பது பட்டரியின் ஆயுளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Flickr
Source: Flickr

Wireless charger களின் விலைபற்றி பார்ப்போம்.

Apple, single charging pad ஐ 55 ஆ. டாலருக்கும் dual charger ஐ 120 டாலர்களுக்கும் விற்பனை செய்கிறது. Samsung உம் இதே விலையில் விற்பனை செய்கிறது. Wireless charger என்பது தமது வருமானத்தைப் பெருக்க மொபைல் போன் தயாரிப்பவர்கள் வகுத்துள்ள திட்டம் இது என்று பலரும் சொல்கிறார்கள. Apple தனது வயர்லஸ் earphone களை 250 தொடக்கம் 350 டாலர்களாக விற்பனை செய்வதை உதாரணமாகச் சொல்லலாம் . ஆனால் வெளிச்சந்தையில் நம்பகமான வேறு brand wireless pad களை 20/30 டாலர்களுக்கு வாங்கமுடியும்.

பொதுவாகப்பபார்க்கும்போது wireless charge முறையில் நன்மைகளே அதிகம் இருப்பதாகப்படுகிறது?

ஆம். வெகு விரைவில் பல தயாரிப்பாளர்கள் தமது போன்களில் வயர் தொடர்பு charge வசதிகளை அகற்றி விடுவார்கள் என்றே தோன்றுகிறது. ஆகவே ஒரு கட்டத்தில் பலரும் இந்த wireless charge இற்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now