2015 மார்ச் மாதம் Brittney Gargol வீதியோரத்தில் இறந்து கிடந்த போது அவர் அருகில் ஒரு கருப்பு நிற பெல்ட் கிடந்துள்ளது. மூச்சுதிணறலினால் அவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்ட போதும் எந்த ஒரு ஆதாரமும் துப்பும் போலீசாருக்கு கிடைத்திருக்கவில்லை.
போலீசாரை திசை திருப்ப Gargol இறந்ததிற்கு பிறகு Antoine அன்றைய தினம் அவருடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியை முகநூலில் பதிவேற்றயிருந்தார். கொலை நடந்து பல வருடங்களுக்கு பிறகு அந்த செல்பி படம் போலீசார் கண்ணில் பட, அதுவே Antoineக்கு வினையாகி விட்டது. இறந்து கிடந்த Gargolன் உடலுக்கு அருகில் கிடந்த பெல்ட் மாதிரியான பெல்ட் ஒன்றை அப்புகைப்படத்தில் Antoine அணிந்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் Antoine குடும்பத்தாரிடம் வீசாரணையை தீவிரப்படுத்தினர். Antoine தனது நண்பியுடன் குடித்துவிட்டு அவரை அடித்து மூச்சு திணறலுக்கு உள்ளாக்கியதை அன்றைய தினம் தனது குடும்பத்தாரிடம் உளறியதை அவர்கள் போலீஸ் விசாரணையில் கூறியதை தொடர்ந்து Antoine கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசாரிடம் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனை தொடர்ந்து அவருக்கு ஏழு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Share
