SKIP TO MAIN CONTENT

'மகளைக்கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற இலங்கைப்பெண்' - லண்டனில் சம்பவம்

Maps
Source: Maps

2 min read

Published

Updated


Skip to article content

தெற்கு லண்டனில், இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இளம் தாயொருவர் தனது ஐந்து வயது மகளை கத்தியால் குத்திப்படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

Mitcham பகுதியில் கடந்த செவ்வாயன்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச்சம்பவத்தில் சயாகி என்ற சிறுமியே உயிரிழந்தவர் ஆவார்.

மகளை படுகொலை செய்துவிட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயற்சித்த சுதா கருணானந்தம் (வயது 35) தற்போது ஐந்து மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர், உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பாக, உடனடியாக அங்கு சென்று, அவசரசேவைக்கு தகவல் வழங்கிய அயலவர் கூறும்போது - கடந்த செவ்வாய் பிற்பகல், குறிப்பிட்ட பெண்ணின் கணவர் வழக்கம்போல அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் பயங்கரமான அழுகுரல் சத்தம் கேட்டது. எனது தங்கையையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது,  அவர்களது மகன் அழுதுகொண்டு நின்றான். இன்னொரு அறையில்  மகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். அருகிலேயே சுதாவும் விழுந்துகிடந்தார்"- என்று தெரிவித்தார்.

அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், உடனடியாக விரைந்துவந்து வந்த மருத்துவப்பிரிவினர், ஹெலிக்கொப்டர் மூலம் தாயையும் மகளையும் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

சயாகி உயிரிழந்தமை மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் ஐந்து மணிநேரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர், சுதாவின் வயிற்றில் ஏற்பட்ட ஆழமான கத்திக்குத்துக்களிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பொலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மகளை படுகொலை செய்தார் என்று கூறப்படும் சுதா இந்த சம்பவத்துக்கு முன்னரே கடுமையான நோயினாலும் மனஅழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தாங்கள் கேள்விப்பட்டிருந்ததாக அயலவர்கள் கூறியுள்ளனர்.

 Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now