SKIP TO MAIN CONTENT

பல்கலைக்கழக பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் இந்தியப்பெண்ணுக்கு மூன்றரை வருட சிறை!

kkg
Picture for representational purposes only. Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

விக்டோரிய பல்கலைக்கழகத்தின் நிர்வாக பிரிவில் பணியாற்றிய இந்தியப்பின்னணிகொண்ட பெண்மணி ஒருவர் பல்கலைக்கழகத்தின் ஆறரை லட்சம் டொலர்கள் பெறுமதியான பணத்தை சொந்த தேவைக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 27 ஆம் திகதி மெல்பேர்ன் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியது.

விக்டொரிய பல்கலைக்கழகத்தின் நிர்வாக பிரிவில் பணியாற்றிய குறிப்பிட்ட பெண்மணி பல்கலைக்கழத்தின் பெயரில் சுமார் 198 EFTPOS பரிசு அட்டைகள், 102 Coles Myer பரிசு அட்டைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து தனது சொந்தத்தேவைக்கு பயன்படுத்தியுள்ளார் என்றும் பல்கலைக்கழகத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களை பல கொள்வனவு நடவடிக்கைக்காக பயன்படுத்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பொலீஸாரும் விக்டோரிய பொதுச்சேவைகள் கண்காணிப்புக்குழுவினரும் Operation Franklin என்ற பெயரில் நடத்திய விசாரணையின் முடிவில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு குறிப்பிட்ட பெண்மணி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மார்ச் 27 ஆம் திகதி தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now