குடும்ப வன்முறையும், தற்காலிக விசாவில் உள்ளவர்களும்!

தற்காலிக Partner விசாவில் இருக்கும் பலர், தங்கள் விசாவை இழக்க நேரிடும் என்ற பயத்தில், மோசமான துணையுடன் தொடர்ந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலிய குடிவரவுச் சட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறமுடியும்.

ஆஸ்திரேலியாவில் தற்காலிக partner விசாவில் இருப்பவர்கள் குடும்ப வன்முறையை எதிர்கொண்டு அதனால் அவர்களது உறவு முறிவடைந்தாலும், அவர்கள் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆனால் கலாச்சார பின்னணி உட்பட பல்வேறு காரணிகளால் பலர் உதவியை நாடுவதில்லை.

குடும்ப பிரச்சினையை வெளியில் இருப்பவர்களுக்கோ அல்லது சமூகத்துக்கோ வெளியிடக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.எனவே பொதுவெளியில் அவமானப்படுவதை தவிர்க்க வேண்டும் என நினைத்து, குடும்ப வன்முறையை அனுபவிக்கும் போது, அதை இரகசியமாக பேணுகிறார்கள்.

குடும்ப வன்முறையை அடிப்படையாக வைத்து நிரந்தர வதிவிட உரிமை பெறுபவர்களில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
Battered woman raising her hand in self-defense
Source: Benjamin RondelGettyImages
பலர் தங்கள் விசாவை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் மோசமான துணையுடன் தொடர்ந்து வாழ்கின்றனர். தம்மை ஸ்பான்சர் செய்தவர்கள் என்பதால், கணவன்மாரில் மிகவும் தங்கியிருக்கிறார்கள். இந்தநிலையை கணவன் அவர்களுக்கெதிரான அச்சுறுத்தலாகப் பயன்படுத்தலாம்.

இது பெண்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது. ஆஸ்திரேலியாவில் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை இருக்கிறது என்பதை அறியாமல், எங்கே உதவி பெறலாம் எனத் தெரியாமல், அவர்கள் ஒரு மோசமான உறவில் அல்லது திருமணத்தில் தொடர்ந்தும் இருக்கக்கூடும்.

தற்காலிக partner விசா அல்லது மணத்துணைக்கான விசாவில் உள்ளவருக்கும், அவரை ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பான்சர் செய்தவருக்கும் இடையிலான உறவு குடும்ப வன்முறை காரணமாக முறிவடைந்தால், ஆஸ்திரேலிய குடிவரவு சட்டத்தின் கீழ் குடும்ப வன்முறை தொடர்பிலான உதவிகளைப்பெற அவர்கள் ஆதாரங்களை வழங்க வேண்டும்.

குடும்ப வன்முறை நிகழ்ந்ததை நிரூபிக்க நீதிமன்றால் வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பு, AVO [apprehended violence order] போன்ற நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை உள்ளடக்கிய நீதித்துறை ஆதாரங்களை சமர்ப்பிப்பதே எளிதான வழியாகும்.
Female young adult gesturing stop and social distancing
Source: DME PhotographyGetty Images
நீதித்துறை ஆதாரங்களை உங்களால் பெற முடியாவிட்டால், மருத்துவரின் அறிக்கை, statutory declarations மற்றும் மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் ஆகியோரின் அறிக்கைகள் உள்ளிட்ட நீதித்துறை அல்லாத சான்றுகளை சமர்ப்பிக்கலாம். இந்த அறிக்கைகளில் என்னென்ன சேர்க்கப்பட வேண்டும் என்ற கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளன.

குடும்ப வன்முறை தொடர்பான இந்த விசேட ஏற்பாடுகள் மிகக் குறைந்த விசாக்களுக்கு மட்டுமே உள்ளன. பாதிக்கப்பட்டநிலையில் பிற தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் தமது நிலைமை குறித்து சட்ட ஆலோசனை பெற வேண்டும்.

ஒரு உறவு முறிவடைந்துவிட்டால் அல்லது தங்களது உறவில் குடும்ப வன்முறையை அனுபவித்து வந்தால், அவர்களுடைய விசா நிலைமை அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அல்லது அந்த உறவை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் காரணியாக விசா காணப்பட்டால், அவர்கள் ஆலோசனையை நாடுவது மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் குடும்ப வன்முறை தொடர்பான ஏற்பாடுகள் அவர்களுக்குப் பொருந்தாவிட்டாலும் வேறு தெரிவுகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். உதாரணமாக தகுதிவாய்ந்த வேறு சில விசா பிரிவுகளின்கீழ் விசா ஒன்றுக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
For nationwide support, contact 1800 RESPECT, the National Sexual Assault, Family & Domestic Violence Counselling Line on 1800 737 732 any time. If you are feeling distressed and need emotional support, call the Beyondblue coronavirus mental wellbeing support service on 1800 512 348 or Lifeline on 13 11 14 any time of the day and night. For women’s health-related information in your language, contact the Multicultural Centre for Women’s Health on its toll free number 1800 656 421 between 10am to 4pm. If you need language support, call 13 14 50 for an interpreter and ask to be connected to your preferred support organisation. Call 000 immediately if your life is in danger.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Published

Updated

By Amy Chien-Yu Wang

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand