Woolworths பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் single-use பிளாஸ்டிக் பை பயன்பாடு முற்றாக தடைசெய்யப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி மீள்-பாவனைக்கு உகந்த பைகளை தமது அங்காடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அல்லது ஏற்கனவே தம்மிடம் உள்ள பைகளை எடுத்துவரலாம் என்றும் Woolworths அறிவித்திருக்கிறது.
பிளாஸ்டிக் பாவனையின் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Woolworths கொண்டுவருகின்ற தடை பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை Coles பல்பொருள் அங்காடிகளில் ஜுலை 1ம் திகதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
