SKIP TO MAIN CONTENT

நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவரா? இது உங்களுக்கான போட்டி!

Working from home
Must maintain proper sitting posture Source: Getty Images

1 min read

Published


Skip to article content

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக நம்மில் பலரும் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம்.

அப்படி வீட்டில் இருந்து வேலை செய்யும் நேரத்தில் நாம் அலுவலகம் செல்லும்போது அணிகின்றமாதிரி உடைகளை அணிவதில்லை.

சிலர் ஏனோதானோவென்று உடை அணியலாம் அல்லது சிலர் தங்களுக்கு பிடித்த மாதிரி அணியலாம்.

எப்படி அணிந்தாலும் நீங்கள் அணிந்திருக்கும் உடையுடன் ஒரு புகைப்படம் எடுத்து  அந்த புகைப்படத்தை இந்த இணைப்பினூடாக பதிவேற்றுங்கள்.

பதிவேற்றப்படும் வித்தியாசமான புகைப்படத்திற்கு  $75 மதிப்புள்ள  SBS Radio merchandise pack பரிசாக அனுப்பிவைக்கப்படும். போட்டி முடிவடையும் தேதி: ஜூன் 20 சனிக்கிழமை.

இப்போட்டி குறித்த நிபந்தனைகளை அறிந்துகொள்ள: terms and conditions

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now