நமக்கு தரவுகள் நம்பகமாக கிடைத்த காலப்பகுதியைப் பார்க்கும் போது 1960 இல் 300 கோடியாக இருந்த மக்கள் தொகை அடுத்த 14 ஆண்டுகளில் இரட்டிப்படைந்து 400 கோடியானது. அதற்கு அடுத்த 13 ஆண்டுகளில் 500 கோடியானது. அதற்கு அடுத்த11 ஆண்டுகளில் 600 கோடியானது. அடுத்த12 ஆண்டுகளில் 700 கோடி, அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது தற்போது 800 கோடியாக அதிகரித்திருக்கிறது.
இந்த trend - போக்கை அல்லது வேகத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொரு 10 முதல் ஆண்டுகாலப்பகுதியில் உலக மக்கள்தொகை 100 கோடியால் அதிகரிக்கிறது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லுமா என்று பார்த்தால் ‘இல்லை’ என்று ஒரு சாராரும் ‘ஆம், ஆனால் முந்தைய வேகத்தில் உயராது’ என்று மற்றொரு சாராரும் மாறுபட்ட பதில்களை முன்வைக்கிறார்கள்.
உயராது: என்ன காரணம்?
சர்வதேச ரீதியாக Total fertility rate என்ற ஒரு அளவீட்டை வைத்திருக்கிறார்கள். கருவுறும் வயதில் உள்ள ஒரு பெண் எத்தனைக் குழந்தைகளைப் பெறுகிறார் என்பதே இந்தக் கணிப்பாகும் . இந்த TFR என்ற அளவு 2.1 என்ற அளவில் இருந்தால், உலக மக்கள் தொகை உயராது. அதாவது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இன்னும் இரு குழந்தைகளைப் பெறும்போது சம அளவு replacement நிகழ்வதால் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை. உலக அளவில் total fertility rate இப்போது 2.3 ஆக இருக்கிறது. 1990 இல் 3.2 ஆக இருந்த இது 2.3 ஆக இப்போது வீழ்ச்சியடைந்திருக்கிறது.

Bulgaria, Lithuania, Latvia, Serbia, Ukraine, போன்ற நாடுகளின் fertility rate சராசரி 1.5 ஆகும்.ஆகவே குடும்பங்கள் சுருங்கிவரும் நிலை மிக வேகமாக நிகழ்கிறது என்பதால் உலகமக்கள் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. ஆகவே மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா, இந்தியா, அமெரிக்கா , இந்தோனேஷியா போன்ற நாடுகளில் replacement என்ற வீதத்திலேயே மக்கள் தொகை சமன்செய்யப்படும் என்பதால் உலக மக்கள்தொகை அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும். இதற்கு ஆதாரமாக மிகப்பெரிய மக்கள் தொகையைக்கொண்ட நாடுகளின் fertility rate ஐ இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
- இந்தியாவில் இது 2.1
- சீனாவில் 1.7
- அமெரிக்காவிலும் இது 1.7
- இந்தோனேஷியாவில் 2.2
உயரும்: என்ன காரணம்?
பொருளாதார ரீதியாக வளர்சியடைந்துவரும் நாடுகளில் குடும்பங்கள் சுருங்கிக்கொண்டே போனாலும் வறிய, பின்தங்கிய நாடுகளில் பெண்கள் குழந்தைப்பெற்றுக்கொள்வது அதிகரித்தே உள்ளது. ஆப்ரிக்க க் கண்டத்தில் Niger என்ற நாட்டில் ஒரு பெண் சராசரியாக 7 குழந்தைகளைப் பெறுகிறார்.

Somalia, Congo, Mali, Chad ஆகிய நாடுகளில் ஒரு பெண் சராசரியாக 6 குழந்தைகளைப் பெறுகிறார். பல ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இது இன்னும் 4/5 ஆக இருக்கிறது. Nigeria, Tanzania, Ethopia, Egypt ஆகிய நாடுகளிலும் கருவுற்ற பெண்கள் பெற்றுக்கொள்ளும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்தே இருக்கிறது. ஆகவே இவற்றைக் கணக்கிலெடுக்கும் போது, 2050 இல் உலக மக்கள்தொகை 970 கோடியாக உயரும் என்று ஐ. நா வின் பிந்திய கணிப்புகள் சொல்கின்றன. அதற்கு அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள்தொகை 60 கோடியால் மட்டுமே அதிகரிக்கும் என்றும் இந்த கணிப்பு சொல்கிறது.
ஆகவே ஒப்பீட்டு அளவில் உலக மக்கள் தொகை மெதுவாகவே உயரும்; இன்னும் 100 ஆண்டுகளில் replacement rate என்ற நிலையை எட்டி, பிறப்பும் இறப்பும் சமன் என்ற நிலை எட்டப்படலாம் என்பது இந்த கருத்தாகும்.
மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்
நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பினால் கல்வி, வேலைவாய்ப்பு, நலத்துறை சேவைகள், போக்குவரத்துச் சேவைகள், முதியோர் பராமரிப்புச் சேவைகள் என்பவை தொடர்பாக பலநாடுகள் அழுத்தங்களுக்கு உட்படும் என்பதைச்சொல்லவேண்டியதில்லை. இந்த சேவைகளை வழங்குவதற்காக பல நாடுகள் தாம் அறவிடும் வரிகளை அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அதிகரித்த மக்கள்தொகை காரணமாக வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக தொழில்களில் ஈடுபடக்கூடிய 20-60 வயதிற்குஇடைப்பட்டோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்பதால் worker shortage என்ற தொழிலாளர் பற்றாக்குறை உருவாகும். குழந்தைகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமான, முதியோர்களைக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று IHME ஐச்சேர்ந்த Amanda Smith கூறுகிறார். அரசாங்கம் என்ற முறையில் தீர்மானங்களை எடுப்பது தொடர்பாகவும் பொதுநிதி எங்ஙனம் செலவிடப்படவேண்டும் என்பதிலும் கலாச்சார ரீதியான மாற்றங்கள் தேவைப்படும் நிலை உருவாகும். வீட்டு வசதிகள் தொடர்பான தீர்மானங்களின் போது முதியோரின் தேவைகள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நிலை உருவாகும். ஆஸ்திரேலிய போன்ற பல நாடுகள் ஏற்கனவே இதற்கான திட்டங்களை வகுத்துள்ளன. நகரங்கள் பெரிதாகும்போது முதியோர் நலனுக்காக walkability, accessibility என்ற முதியோர் நடப்பதற்கான அம்சங்கள், இடங்களைச் சென்றடைவதற்கான தேவைகள் என்பன விரிவாக்கப்படவேண்டும் என்று Dr. Charles Edwards கூறுகிறார்.
ஒருபக்கம் அதிகரிக்கும் மக்கள் தொகை காரணமாகவும் மறுபக்கம் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவும் உலக உணவுத்தேவை பலமடங்கு அதிரிக்கும் என்பது உண்மை. கடுமையான வறட்சி பல ஆண்டுகளாக நிலவும் Somalia போன்ற நாடுகள் உணவு பற்றாக்குறை காரணமாக பலத்த சவால்களை எதிர்நோக்கும் என்று World Vision CEO Daniel Wordsworth கூறுகிறார்.

உணவு உற்பத்தி என்பதைவிட, உணவு எப்படி விநியோகப் படுத்தப்படுகிறது என்பதே பிரதான பிரச்சனை என்கிறார் University of Melbourne ஐச்சேரந்த Dr. Rachel Carey. பருவநிலை மாற்றம், நாடுகளுக்குடையேயான யுத்தங்கள் என்பன காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்றபோதும் உணவை சமமான முறையில் பகிர்ந்தளிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக அவர்கூறுகிறார்.
விவசாய காணிகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டுவருகின்றன. நகரமயமாக்கல் துரிதமாக நடைபெறுகிறது. உலகில் 55 சதவீத்த்திற்கு அதிகமானோர் நகரங்களிலேயே வசிக்கிறார்கள். விவசாய நிலங்களின் அளவு சுருங்கிப்போவதே உணவு பற்றாக்குறைக்கு பிரதான காரணமாகிறது என்று பலரும் கருதுகிறார்கள். நதிகளை அண்டிய வளமிக்க fertile நிலங்களில் நகரங்கள் உருவாகின்றன.
குழந்தை பிறக்கும் போதே பசியுடன் தான் அழுதுகொண்டே பிறக்கிறது. அடிப்படைத்தேவைகளுள் உணவு பிரதானமாகிறது. ஆகவே அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி, விநியோகம் என்பவற்றைச் சீர்படுத்துவதே எதிர்காலத்தில் பிரதான சவாலாக இருக்கும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
