உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்பேர்ன் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் பிடித்துள்ளது.
The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில் 0.7 புள்ளி வித்தியாசத்தில் மெல்பேர்னைப் பின்தள்ளி வியன்னா நகரம் வெற்றி பெற்றுள்ளது.
வியன்னாவுக்கு 100 க்கு 99.1 புள்ளிகளும் மெல்பேர்னுக்கு 98.4 புள்ளிகளும் கிடைத்துள்ளன.
மூன்றாவது இடத்தில் ஜப்பானின் ஒசாகா நகரமும் நான்காவது இடத்தில் கனடாவின் கல்காரி நகரமும் காணப்படுகின்றன.
சிட்னி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள அதேநேரம் அடிலெய்ட் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1. Vienna, Austria
2. Melbourne, Australia
3. Osaka, Japan
4. Calgary, Canada
5. Sydney, Australia
6. Vancouver, Canada
7. (tie) Toronto, Canada
7. (tie) Tokyo, Japan
9. Copenhagen, Denmark
10. Adelaide, Australia
