2023-க்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் எவை?

கடந்த ஆண்டு முதலிடத்தை இழந்த Qantas மீண்டும் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது.

 Qantas

Qantas Source: Supplied / Supplied / Qantas

உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை AirlineRatings.com வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவின் Qantas விமானசேவை நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

400 சர்வதேச இணையத்தளங்களின் தரவுகளைத் தொகுத்து, ஆண்டுதோறும் பாதுகாப்பான விமான சேவைகளின் பட்டியலை ஆன்லைன் தளமான AirlineRatings வெளியிடுகிறது.

விமானியின் பயிற்சி, விமானத்தின் வயது பாதுகாப்பு மற்றும் பொறியியல் சிக்கல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் தொகுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் அனுபவம் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.

தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்திலிருந்த Qantas, கடந்த ஆண்டுக்கான பட்டியலில் Air New Zealand-ஆல் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தநிலையில் தற்போது மீண்டும் முதலிடத்தைத் பிடித்துள்ளது.

Qantas அதன் 100 ஆண்டுகால வரலாற்றில், உலகின் மிகப் பழமையான, தொடர்ச்சியாக இயக்கப்படும் விமான நிறுவனமாக, தனது செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பில் சாதனை படைத்துவருவதாக AirlineRatings சுட்டிக்காட்டியுள்ளது.

AirlineRatingsஇன் பாதுகாப்பான விமான சேவைகளின் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளது.
  1. Qantas
  2. Air New Zealand
  3. Etihad Airways
  4. Qatar Airways
  5. Singapore Airlines
  6. TAP Air Portugal
  7. Emirates
  8. Alaska Airlines
  9. EVA Air
  10. Virgin Australia/Atlantic
  11. Cathay Pacific Airways
  12. Hawaiian Airlines
  13. SAS
  14. United Airlines
  15. Lufthansa/Swiss Group
  16. Finnair
  17. British Airways
  18. KLM
  19. American Airlines
  20. Delta Air Lines
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
00000185-7ba9-df1c-a597-7bf98c650000 world's safest airline | SBS Tamil