ஆஸ்திரேலியாவில், உங்கள் மொழியிலேயே உதவி கிடைக்கிறது.
Australian Institute of Health and Welfare மூலம் 2021 இல் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, சுமார் மூன்றில் ஒரு ஆஸ்திரேலியர் சூதாட்டத்திற்காக பணத்தைச் செலவிடுவதாகவும், 7.2% ஆஸ்திரேலிய பெரியவர்கள் சூதாட்டத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
நிதி, சட்டம் மற்றும் உணர்வு ரீதியான தீங்கு உட்பட பல்வேறு வடிவங்களில் சூதாட்டத்தின் காரணமாக ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன.
இவை தனிநபரை மட்டுமல்ல, அவர்களின் குடும்பம் மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது.
இந்த அடிமைத்தனத்தின் தன்மை ஏன் அதை நிவர்த்தி செய்வது கடினமாக்குகிறது என்பதை விலகுவதாக கூறுகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான Sally Gainsbury.

கலாச்சாரம் மற்றும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட (CALD) பின்னணியில் உள்ள மக்களிடையே சூதாட்டப் பங்கேற்பு அதிகமாக இல்லை. ஆனால் பொது சமூகத்தை விட அவர்கள் சூதாட்ட தீங்குகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் சூதாட்ட பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
Natalie Wright Responsible Gambling in New South Walesஇன் இயக்குநராக உள்ளார். ஒருவரின் கலாச்சாரம் சூதாட்டத்தைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையை பாதிப்பதாக கூறுகிறார்.
அரபு பின்னணி கொண்ட Adam மேற்கு சிட்னியில் வசிப்பவர். அவர் 2014 ஆம் ஆண்டு முதல் சூதாட்டத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவரது அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டி அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளன.
Adam-இன் விடயத்தில் , அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் சூதாட்டப் பிரச்சனைகளுக்கான ஆலோசனை உதவியை நாடியுள்ளார் , அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் Sally Gainsbury சிட்னி பல்கலைக்கழகத்தில் சூதாட்ட சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
பலர் முறையான ஆதரவு உதவிகளை தேர்ந்தெடுப்பதில்லை என்றும் சூதாட்டப் பிரச்சனைகளை அனுபவிக்கும் நபர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களும் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கும் ஆதரவு தேவை என்கிறார் பேராசிரியர் Sally Gainsbury.

தொலைபேசி, ஆன்லைன் அல்லது நேரடியான சந்திப்புகள் மூலம் சூதாட்டத்திலிருந்து மீள்வதற்கான ஆலோசனை மாநில அடிப்படையிலான சேவைகள் வழங்குகின்றன .
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் "The number that changed our lives" என்று பெயரிடப்பட்டுள்ள பிரச்சாரம், சூதாட்டத்தில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள மற்றும் உதவியை எவ்வாறு பெறுவது என்று நிச்சயமற்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
Gamble Aware ஐ 1800858858 என்ற எண்ணில் அழைக்கும் நபர்கள், மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தவும், அவர்களின் மொழியைப் பேசும் ஆலோசகரைப் தேர்தெடுக்க முடியும் என்று மேலும் கூறுகிறார் Natalie Wright.
சூதாட்டக்காரர்களின் அன்புக்குரியவர்கள் முதலில் தங்களுக்கான ஆதரவு உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க முடியும் என்று ஊக்குவிக்கிறார் பேராசிரியர் Sally Gainsbury.
மேலதிக உதவிகளுக்கு கீழே உள்ள இணைப்புகளை அழுத்தவும்:
· National Gambling Helpline on 1800 858 858
· National Debt Helpline on 1800 007 007
——————————————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
