SKIP TO MAIN CONTENT

பிழையான லாட்டரி சீட்டை வாங்கியவர் பல மில்லியன் வென்றார்

தவறுதலாக வாங்கிய சீட்டு, வென்றுள்ள பரிசு என்ன தெரியுமா?

Oksana Zaharov
Source: New York Lottery

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

அமெரிக்காவின் New Jersey மாநிலத்தின் Edgewater என்ற இடத்தைச் சேர்ந்த 46 வயதான Oksana Zaharov என்ற பெயர் கொண்ட பெண்மணி, New York நகருக்குச் சென்ற போது, ஒரு $1 லாட்டரி சீட்டு (குலுக்கல் பரிசுச் சீட்டு) வாங்க நினைத்து, கடையிலிருந்தவரிடம் பணம் கொடுத்த போது, கடைக்காரர் தவறுதலாக, $10 சீட்டைக் கொடுத்து விட்டார். கடைக்காரர் தவறு செய்திருந்தாலும், அவர் மேல் இரக்கப்பட்டு அவர் கொடுத்த சீட்டையே வாங்க இந்தப் பெண்மணி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் அந்த சீட்டைத் தான் வாசிக்கும் புத்தகத்தின் அடையாளமாக (bookmark) பயன்படுத்தி வந்தவர் ஒரு நாள் அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக அந்த இலக்கங்களைப் பார்த்தால், அவர் வாங்கிய சீட்டு பரிசு பெறும் சீட்டு என்பதை உணர்ந்தார்.

'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்பது பழமொழி. இந்தப் பெண் தவறுதலாக வாங்கிய சீட்டு, வென்றுள்ள பரிசு என்ன தெரியுமா?

20 ஆண்டுகளுக்கு $ 5 மில்லியன் டொலர்கள் அதைத்தொடர்ந்து, அவர் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு வருடமும் $ 172,068 - அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்குக் கிடைக்கும்.

இது வரை எதையும் வென்றிராத, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான Oksana Zaharov, இந்த வெற்றி குறித்து சொல்லும்போது, "லாட்டரி டிக்கெட் தவறானது என்று நான் உறுதியாக இருந்தேன். லாட்டரி அலுவலகத்திற்கு அதை நான் எடுத்து வந்த பின்னர் தான் அது உண்மையாகவே பரிசு வென்றுள்ளது என்று எனக்குத் தெரியும்" என்றார்.

தனது குடும்பத்துடன் பஹாமாஸ் தீவில் விடுமுறை செல்லவும் தனது பிள்ளைகளின் கல்லூரிச் செலவிற்கு மீதிப்பணத்தைச் செலவிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now