நான்கு மாதங்களுக்கு பிறகு இன்றையதினம் விக்டோரியா புதிதாக கொரோனா வைரஸின் எந்தப்பாதிப்புமில்லாமல் விடிந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவோ மரணங்கள் சம்பவிக்கவோ இல்லை.
மெல்பேர்னின் வடக்கு பகுதியில் பரவியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட கொரோனா பரவலை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக சோதனைகள் செய்யவேண்டியுள்ளது என்று Premier Daniel Andrews நேற்று தெரிவித்திருந்தார். இதன்காரணமாக, திட்டமிட்டபடி நேற்று நீக்கப்படவிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பையும் தாமதிக்கவேண்டியிருப்பதாக கூறியிருந்தார்.
விக்டோரிய சுகாதார அமைப்பினர் இன்று காலை தெரிவித்துள்ள தகவல்களின்படி, மெல்பேர்ன் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா சோதனையில் யாருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறியப்படவில்லை எனவும் இது நல்லதொரு செய்தி என்றும் தெரிவித்துள்ளனர்.
மெல்பேர்ன் வடக்கே மேலும் 1400 பேரிடமிருந்து பெறப்பட்ட சோதனை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share
