SKIP TO MAIN CONTENT

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே (Robert Mugabe) காலமானார்

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே (Robert Mugabe) காலமானார். அவருக்கு வயது 95.

Robert Mugabe
Former President of Zimbabwe Robert Mugabe. Source: AAP

1 min read

Published

Source: SBS News



Skip to article content

1980ஆம் ஆண்டு, பிரித்தானியாவிலிருந்து சுதந்திரமாகிய ஜிம்பாப்வே நாட்டின் ZANU-PF கட்சியை தலைமை தாங்கிய இவர் 37 ஆண்டுகள் அதிபராக ஆட்சி செய்தார்.

ஆனால் மனித உரிமை மீறல்கள் மற்றும் தேர்தல்கள் முறைகேடுகள் என்று வந்த பல குற்றச்சாடுகள், பல மேற்கத்திய நாடுகளை 2000ஆம் ஆண்டிலிருந்து அநாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தூண்டின.

"அமைதியாக உறங்குங்கள் ராபர்ட் முகாபே. உங்கள் மரணத்திற்கு எனது பதில் சிக்கலானது" என்று, அந்நாட்டின் கல்வி அமைச்சர் ஃபட்ஜாய் மஹெர் ட்வீட் செய்துள்ளார்.

அவரது அதிபர் பதவி 2017ஆம் ஆண்டு, அவரது  93 வயதில், பறிக்கப்பட்டு, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now