SKIP TO MAIN CONTENT

வாய் திறந்தார் Mark Zuckerberg

மில்லியன் கணக்கானவர்களின் தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து Facebook தலைமை நிர்வாகியும் அதனை ஆரம்பித்தவருமான Mark Zuckerberg முதல் தடவையாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

FIle image of Facebook CEO Mark Zuckerberg
FIle image of Facebook CEO Mark Zuckerberg Source: AAP

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AFP, SBS



Skip to article content

ஒரு பிரித்தானிய நிறுவனம் Facebook பயன்படுத்துபவர்கள் தரவுகளைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 2016ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் கருத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவருக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தது என்ற செய்தி பலர் மனதையும் தாக்கியுள்ளது.  இது குறித்துக் கருத்துக் கூறிய Mark Zuckerberg, "உங்கள் தரவுகளைக் காப்பாற்றும் பொறுப்பு எங்களது.  எங்களால் முடியாது என்றால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யத் தகுதி இல்லாதவர்கள்," என்று கூறினார்.

Facebook பயனர்களின் தரவுகளைக் கசியவிடாமல் செய்வதற்கு, புதிய பொறியியலாளர்களைப் பயன்படுத்தி புதிய நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக Mark Zuckerberg தனது Facebookல் அறிவித்தார்

"இது மக்களுடைய நம்பிக்கையைப் பெருமளவில் குறைத்துவிட்டது.  இது ஒரு பாரிய நம்பிக்கை மீறலாகும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், அதை சமாளிக்க போதுமான அளவு நாங்கள் செய்யவில்லை என்று நான் மிகவும் வருந்துகிறேன்" என்று Facebook தலைமை நிர்வாக அதிகாரி Sheryl Sandberg ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

Facebookஐ ஆரம்பித்தவன் நான். எனவே, அதில் என்ன நடந்தாலும் பொறுப்பேற்க வேண்டியவனும் நான் தான்.[I started Facebook, and at the end of the day I'm responsible for what happens on our platform.] Mark Zuckerberg

கடந்த வார இறுதிகளில் வெளிவந்த முறைகேடுகளைத் தடுக்க, 2014 முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் Mark Zuckerberg.

"ஆனால், நாங்களும் தவறிழைத்துள்ளோம், இன்னும் செய்ய வேண்டியவை பல இருக்கின்றன.  நாம் முன்னேற வேண்டும், அதை விரைவில் செய்ய வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

Aleksandr Kogan என்ற ஆய்வாளர் உருவாக்கிய ஆளுமைக் கணிப்பு (personality prediction) செயலி மூலம் 50 மில்லியன் Facebook பயனாளர்களின் சுயவிவரங்கள் மூன்றாந்தரப்பினருடன் பகிரப்பட்டுள்ளது என்று Facebookல் கடமையாற்றிய ஒருவர் செய்தி வெளியிட்டதிலிருந்து, இந்தப் பிரச்சனை சர்வதேச அவதானத்தைப் பெற்றுள்ளது.

.

பிரித்தானிய நிறுவனம் Cambridge Analytica எப்படி Facebook தரவுகளைப் பயன்படுத்தி அமெரிக்க தேர்த்தலில் மக்கள் மனதை மாறியது என்று அந்த நிறுவனம் BBCக்கு வழங்கிய நேர்காணலை 2016 நவம்பர் மாதம் எமது Facebookல் வெளியிட்டிருந்தோம்.  அதை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now