ஆஸ்திரேலியாவிற்கும் இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையிலான கிரிக்கெட் தொடர்புகள் 1947 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. 1947-இல் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இருப்பினும், அதற்கு சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு "இந்திய" கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதம் அடித்திருந்தார்.
1897-98 இல் ஆங்கிலேயருடன் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் குமார் ரஞ்சித்சின்ஜி அல்லது கே எஸ் ரஞ்சி. கே எஸ் ரஞ்சி சிட்னியில் நடந்த தொடரின் முதல் போட்டியில் 175 ரன்கள் எடுத்தார்.
அந்த நேரத்தில் ஒரு இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.
இந்தியாவில் உள்ள நவநகர் சமஸ்தானத்தை ஆட்சி செய்யப் போகும் இளவரசராக இருந்த ரஞ்சி, அந்தக் காலத்தின் மிகவும் நலினமான துடுப்பாட்ட வீரராக கருதப்பட்டார்.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அவரை கொண்டாடினர். ஆஸ்திரேலிய செய்தித்தாள்களில் ரஞ்சியைப் பற்றி ஏராளமான செய்திகள், கதைகள், பாடல்கள் மற்றும் நேர்காணல்கள் வெளியிடப்பட்டன.
இந்தியருக்கு பருந்தின் கண் உள்ளது, மற்றும் டோலிடோ ஸ்டீல் போன்ற மணிக்கட்டுகள் உள்ளன, மேலும் ஒரு துடுப்பாட்ட வீரருக்கு தேவையான சிறந்த கலைகளில் - பந்தை சரியாக கணிக்கும் கலை உள்ளது.The Armidale Express newspaper, 1897

Ranjitsinhji achieving the honour of Wisden Cricketer of the Year 1897. Credit: Hulton Archive/Getty Images
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ரஞ்சியை தவிர வேறு பல துணைக்கண்ட கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டும் ஆஸ்திரேலியர்களை மெய்மறக்க வைத்தது.
இன்றைய கிரிக்கெட் ரசிகர்களால் இது பரவலாக அறியப்படவில்லை, ஆனால் 1947 க்கு முன்பு ஏராளமான சுற்றுப்பயணங்கள், போட்டிகள் மற்றும் சூப்பர் ஸ்டார்கள் இருந்தனர். இருப்பினும், எவருக்கும் சர்வதேச போட்டிக்கான அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்படவில்லை.

South of England XI cricket team vs The Australians, the opening fixture of Australia's tour of England in 1899. Back row: VA Titchmarsh (umpire), Bill Brockwell, Charlie Townsend, Gilbert Jessop, Jack Mason, Jack Board, Bobby Abel, WAJ West (umpire). Front row; CB Fry, Bill Lockwood, WG Grace, KS Ranjitsinhji, Tom Hayward.
வன்மமான உடலசைவு தந்திரங்களுக்காக இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு இந்திய இளவரசரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Colours of Cricket podcast தொடரின் மூன்றாவது அத்தியாயத்தில், ஆஸ்திரேலியாவிற்கும் இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையிலான கிரிக்கெட் வரலாற்றில் இருந்து அறியப்படாத இந்தக் கதைகளை ஆராய்வோம்.
Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.
சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.
SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.
இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.
அடுத்துவரும் பாகங்களைத் தவறவிடாமல் செவிமடுப்பதற்கு SBS Radio App-இல் அல்லது Spotify , Apple Podcasts போன்ற உங்களுக்குப் பிடித்த Podcast செயலியில் Colours of Cricket
-ஐ பின்தொடருங்கள். இந்த எட்டு பாகங்கள் கொண்ட தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியிடப்படும்.
Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan
Lead Producer: Deeju Sivadas
Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli
Sound Design: Max Gosford
Program Manager: Manpreet Kaur Singh
Advisor: Patrick Skene
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.