SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
15 பெண் புகலிடக்கோரிக்கையாளர்களின் சிட்னி-கன்பரா நடைபயணம் நிறைவு!

Credit: Facebook: Refugee Women Walk For Fair Go
ஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலைமையை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கிலும், அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் நோக்கிலும், 15 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிட்னியிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை மேற்கொண்டு நேற்றையதினம்(14/11/2023) அதை நிறைவுசெய்திருந்தனர். இந்த நடைபயணம் தொடர்பில் நடைபயணத்தை மேற்கொண்டவர்களில் மூவரான திருமதி நிரஞ்சனா, திருமதி சுகந்தினி மற்றும் திருமதி விஜிதா ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share