மறைந்தது கலகத்தின் கலைமுகம்
Wikimedia Source: Wikimedia
நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 60.தமிழ் நவீன நாடக உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர் குணசேகரன். கவிஞர் இன்குலாப் எழுதி குணசேகரன் பாடிய "மனுசங்கடா நாங்க மனுஷங்கடா....." என்றபாடல் தமிழ்நாட்டு முற்போக்காளர்களின் தேசிய கீதம் எனப் புகழப்பட்ட ஒன்று. நாட்டுப்புறவியல், தலித் பண்பாட்டு அரசியல் வரலாறு, சேரிப்புறவியல், தலித் அரங்கியல் என்று பல கோட்பாட்டுத் தளங்களில் அவர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். மார்க்சிய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும் வெளிப்படுத்திவந்த மக்கள் கலைஞர் அவர். கே.ஏ.குணசேகரன் குறித்த பதிவை முன்வைக்கிறார் சென்னை பல்கலைகலத்தின் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியரும் தலைவருமான வீ.அரசு.
Share