ஆஸ்திரேலியாவில் வளர்ந்த ஆப்பிரிக்க வம்சாவளியைக் கொண்ட இளைஞரான, Nor Shanino தான் வளர்ந்த காலத்தில் இனவெறியை அனுபவித்துள்ளார்.
அவர் SBS Examines-க்கு அளித்த பேட்டியில், ஒரே தலைமுறைக்குள் கூட தனது சமூகத்தில் இனவெறி பற்றிய பார்வையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
“இளம் தலைமுறையினர் சட்ட உதவி மையத்துக்கு சென்று பேசத் தொடங்கியபோது தான் பெற்றோர்கள் ‘என்ன, நீ காவல்துறை மீது வழக்கு போடப் போகிறாயா?’ என்று ஆச்சரியப்படுவது போன்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என அவர் கூறினார்.
Tigist Kebede ஆப்பிரிக்க கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட இளைஞர்களுடன் பணிபுரியும் மனநல ஆலோசகர்.
இளம் தலைமுறையினர் பெரும்பாலும் அன்றாட வாழ்வில் நிகழும் இனவெறி அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றனர்; ஆனால் மூத்த தலைமுறையினர் அதைவிட வெளிப்படையான அல்லது அமைப்புசார் இனவெறியை எதிர்கொண்டிருக்கலாம் என அவர் கூறுகிறார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நடந்த குடிவரவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான ஊடக மற்றும் சமூக மனப்பாங்குகள் காரணமாக தலைமுறை வித்தியாசம் குறைந்து வருவதாக அவர் கூறுகிறார்.
தலைமுறைகளுக்கு இடையில் ஒரு பாலம் உருவாகியுள்ளது.
“இளம் தலைமுறை மற்றும் மூத்த தலைமுறை இணைந்து இனவெறி அனுபவங்களை மட்டுமல்ல, அதற்கான தீர்வுகளையும் சேர்ந்து கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளனர்,” என Tigist Kebede கூறினார்.
Understanding Hate - வெறுப்பை புரிந்துகொள்ளுதல் நிகழ்ச்சியின் இந்த அத்தியாயம், ஆப்பிரிக்க வம்சாவளியினர்கள் தங்களது சமூகங்களிலும் தலைமுறைகளுக்கும் இடையிலும் இனவெறியை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை ஆராய்கிறது.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.




