SKIP TO MAIN CONTENT

அகதி நாடகமும் IPAC - இந்திய கலைநிகழ்ச்சி மாநாடும்

Agathi stage performance. Inset: Aravinth Kumarasamy
Agathi stage performance. Inset: Aravinth Kumarasamy

IPAC - இந்திய கலைநிகழ்ச்சி மாநாடு என்பது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் ஒன்றிணைந்த கலந்துரையாடல்கள், கூட்டு முயற்சிகள், நிகழ்ச்சிகள், மற்றும் பட்டறைகள் மூலம் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இசையை ஆராய்வதற்கான ஒரு தளமாகும். இதன் மூலம், புதிய தலைமுறை கலைஞர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வருடாந்தர விழாவாகும்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

IPAC - இந்திய கலைநிகழ்ச்சி மாநாடு என்பது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் ஒன்றிணைந்த கலந்துரையாடல்கள், கூட்டு முயற்சிகள், நிகழ்ச்சிகள், மற்றும் பட்டறைகள் மூலம் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இசையை ஆராய்வதற்கான ஒரு தளமாகும். இதன் மூலம், புதிய தலைமுறை கலைஞர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வருடாந்தர விழாவாகும்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் வழங்கும், AGATHI, உலகெங்கிலும் உள்ள அகதிகளின் அவலத்தைச் சுற்றியுள்ள பாரபட்சம் மற்றும் தவறான புரிதல் உள்ளிட்ட சமகால பிரச்சினைகளை ஆராயும் ஒரு புதிய நடன-மேடை நாட்டிய நாடகத் தயாரிப்பாகும்.

மெல்பன் நகரில் நடக்க இருக்கும் IPAC - இந்திய கலைநிகழ்ச்சி மாநாடு; அத்துடன் சிட்னி மற்றும் & மெல்பன் நகரங்களில் மேடையேறவிருக்கும் அகதி என்ற மேடை நிகழ்ச்சி குறித்தும் அப்சராஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now