கனரக வாகன ஓட்டுநர்களின் நலனுக்காக... தமிழரின் செயலி!

Hariharan Vikraman and Allotrac App interface Source: Supplied
Wollongong பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அடிப்படையிலான தொடக்கங்களுக்கான ஒரு காப்பகம் iAccelerate. அத்தகைய ஒரு முயற்சி Allotrac. போக்குவரத்து மேலாண்மை மென்பொருளை உருவாக்குவதன் மூலம் போக்குவரத்துத் தொழில் துறைக்கு Allotrac உதவுகிறது. இவர்களது மென்பொருளைப் பயன்படுத்தும் கனரக வாகன ஓட்டுநர்கள், தமது செயற்பாட்டை ஆரம்பிக்க முன், ஒரு சரிபார்ப்பு பட்டியல் வழியாக தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்கள். மேலும் இவர்கள் உருவாக்கியுள்ள செயலி, போக்குவரத்துத் துறையின் மற்றைய பங்குதாரர்களின் பொறுப்புகளையும் கனரக வாகன ஓட்டுநர்களின் செயற்பாட்டையும் எளிதாக நிர்வகிக்க உதவி செய்கிறது. ஓட்டுநர்களின் சோர்வைக் கண்காணிக்கவும் உதவும் இந்த செயலி, பல உயிர்களைக் காப்பாற்றுகிறது என்று சொல்லலாம். Allotrac செயலியை உருவாக்கிய ஹரிஹரன் விக்ரமனுடன், குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
Share