SKIP TO MAIN CONTENT

வயது நூறு.... உடலோ இருபது போல் வளைகிறது !

Padma Shri recipient Nanammal
Padma Shri recipient Nanammal Source: SBS Tamil

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகள் பத்ம விருதுகள். பல்வேறு துறைகளில் முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் இந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம ஸ்ரீ' விருது, தேர்ந்த துறையில் புகழ்பெற்ற சேவைக்காக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு, இந்திய ஜனாதிபதி 85 பத்ம விருதுகளை அறிவித்துள்ளார். அதில், ஆறு பேர் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள். கோயம்புத்தூரில் வாழும் வி. நந்னம்மாள், சிறு வயதிலிருந்து ஒரு யோகா ஆர்வலர். இன்றும் ஒரு இளம் பெண்ணைப் போன்று காலையில் தனது பயிற்சிகளைத் தினமும் செய்து வரும் நந்னம்மாள், தனது 98வது வயதை அண்மையில் பூர்த்தி செய்துள்ளார். அவரது மகன் டாக்டர் பாலகிருஷ்ணனுடன் ஓசோன் யோகா என்ற நிலையத்தில் யோகா பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றும் நந்னம்மாள் இந்த வருடம் பத்மஸ்ரீ விருதைப் பெறுபவர்களில் ஒருவர். யோகா பயிற்றுனர் நந்னம்மாள் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்தப் பதிவையும் பார்க்கவும்: வயது ஒரு எல்லையா? - பன்னாட்டு யோகா நாள்

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now