David Sluck மோனாஷ் பல்கலைக்கழகத்திலுள்ள Australian Centre for Jewish Civilisation-இன் இயக்குநர்.
ஆஸ்திரேலியாவில் யூத விரோதத்தைப் பற்றி நாம் அதிகமாக கேள்விபடுகிறோம் ஆனால் இந்த வகையான வெறுப்பை உண்மையில் எவ்வாறு வரையறுக்கலாம் என்பதில்தான் இன்னமும் விவாதம் நீடிக்கிறது என்று கூறுகிறார்.
Nomi Kaltmann மெல்பனில் வசிக்கும் ஒரு யூதப் பெண். 2023 அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற ஹமாஸ் - இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு, தன் சமூகத்தில் பயம் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது என்று அவர் கூறுகிறார்.
நாம் இன்னும் பெருமையாக யூதராகவே இருக்கிறோம், யூதராகவே வாழ்கிறோம். ஆனால் முன்பை விட இப்போது நாம் சற்றே அதிக கவனமாக இருக்கிறோம்.
கிழக்கு மெல்பன் யூத வழிப்பாட்டு ஆலயம் ஒன்று வெள்ளிக்கிழமை மாலை தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படும் போது ஷப்பாத்தை அனுசரித்து கொண்டு இருந்த 20 பேரில் ரப்பி டோவிட் குட்னிக் என்பவரும் ஒருவர்.
எரியூட்டப்பட்ட அடாஸ் இஸ்ரேல் யூத வழிப்பாட்டு ஆலயம் எங்கள் வீட்டிற்கு மிக அருகில் உள்ளது, அப்போது என் ஐந்து வயது மகள் வீட்டில் இருந்தாள். தீயணைப்பு படையினர் காவல்துறையினர் வருவதை பார்த்த அவள் என்ன நடந்தது என்று வினவினாள், நான் 'ஓ, வழிப்பாட்டு ஆலயம் எரிந்து விட்டது' என்று கூறினேன்.
என் பிள்ளைகளுடன் அவ்வகை உரையாடல்களை நடத்த நான் விரும்பவில்லை, ஆனால் சூழ்நிலை காரணமாக நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.